தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு சொல்லும் பனித் தொழில்நுட்பம்

அது, உலகிலேயே மிகவும் குளிரான இடம்; அந்நாளின் மிகவும் குளிரான நேரத்தில், கடலிற்கு 3500மீட்டர் உயரமானது. குளிர்காலத்தின் மத்தியில், அங்கு வெப்பநிலை, மைனஸ் 30 டிகிரியை தொடும்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உருகும் இமாலய பனிப்பாறைகளை செயற்கையாக உருவாக்கும் பொறியாளர்கள்

இமய மலையின் மேலே, இந்தியாவின் வடக்கில் உள்ள, லடாக் பகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க, 10 தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து ஒரு திட்டத்தை தீட்டுகின்றனர்.

அங்கு சில பெரிய கட்டிடங்களின் மேல் 30 அடிகளுக்கு உயரமான பனிப்பாறைகள் உள்ளன, வசந்தகாலத்தின் ஆரம்ப கட்டத்தில் அவை உருகி, அங்குள்ள கிராம மக்களுக்கு தண்ணீர் அளிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர்.

இந்த பனி வடிவங்கள், சோனம் வாங்சுக் என்பவரின் யோசனையில் உருவானவை. லடாக்கில் பிறந்த இவர், உள்ளூர் மக்களின் அன்றாட பிரச்சனையை சரிசெய்ய பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்.

"நாங்கள், நியூயார்க்கிலும், புது டெல்லியிலும் கிடைக்கும் தீர்வுகளை பெறுகிறோம். ஆனால் அவை இந்த பெரிய மலைப்பகுதிகளில் வேலை செய்யாது. மலைப்பகுதியில் உள்ள மக்கள், தாங்களே தங்களின் தீர்வை கண்டறிய வேண்டும் என நான் நம்புகிறேன்" என்கிறார் அவர்.

படத்தின் காப்புரிமை Sonam wangchuk
Image caption புவியீர்ப்பு விசையால் மேலெழும்பும் நீர், பனியாக மாறி சேகரிக்கப்படுகிறது

லடாக் மக்கள் பல கடினமாக சூழலை எதிர்கொள்கின்றனர். பனிக்காலத்தில் சாலைகளில் தடுப்புகள் ஏற்படுவது என்பது, பனிக்காலம் முழுவதும் அவர்களை, மீதமுள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து பிரிப்பதாகும்.

புவி வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள், பிரச்சனையை அதிகரிப்பதாக அவர் கூறுகிறார். புவி வெப்பமயமாதலின் அறிகுறிகள், ஹிந்து குஷ் இமயமலை பகுதிகளின், மென்மையான சூழலை பாதிக்கிறது என்கிறார் அவர்.

"எங்களால், பனிப்பாறைகள் உயரமான பகுதிகளை நோக்கி விலகுவதை பார்க்க முடிகிறது. வசந்த காலத்தில் மிகவும் குறைவான தண்ணீர் இங்கு உள்ளது. ஆனால், கோடை காலங்களில் நாங்கள் பயங்கரமான வெள்ளத்தை அனுபவிக்கிறோம். இந்த பள்ளத்தாக்கில் ஓடும் நீர் மிகவும் ஒழுங்கற்ற வகையில் பாயும் நிலையில் ஓடும் நிலைக்கு வந்துவிட்டது" என அவர் விளக்குகிறார்.

படத்தின் காப்புரிமை Rolex/ Stefan Walker
Image caption பனிவடிவங்களின் கண்டுபிடிப்பாளர் சோனம்வாங்சுக்

வாங்சுக், அதே பகுதியில் இருக்க கூடிய செவிங் நோர்பல் என்பவரின் பணிகளால் ஈர்க்கப்பட்டுள்ளார். நோர்பல், தட்டையான செயற்கை பனிப்பாறைகளை நான்கு ஆயிரம் அடி மீட்டர் மேலே உருவாக்கினார். ஆனால், அவ்வளவு உயரத்திற்கு சென்று தண்ணீர் கொண்டுவர, மக்கள் தயக்கம் காட்டினர்.

ஒரு பாலத்தை கடந்துகொண்டு இருந்த போது, தனக்கு இந்த பனிப்பாறைகள் குறித்த யோசனை தோன்றியதாக கூறுகிரார் வாங்சுக். "நான் பார்த்தபோது, அந்த பாலத்திற்கு கீழே 3,000 மீட்டரில் பனி இருந்தது. அதுவே, அந்த பகுதியில் மிகவும் தாழ்வான, கதகதப்பான பகுதியாகும்" என நினைவு கூர்கிறார்.

"இது மே மாதம். ஆக, நேரடியாக சூரிய ஒளி பட்டால் இந்த பாறைகள் உருகிவிடும். ஆனால், இதன்மீது சூரிய ஒளி படாமல் பாதுகாத்தால், இங்கு பனியை சேமிக்கலாம் என நான் யோசித்தேன்", என்றார்.


லடாக்

•கடலின் பரப்பில் இருந்து 2700 முதல் 4000 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது.

•மக்கள் தொகை, கிட்டத்தட்ட மூன்று லட்சம்.

•பனிக்கால தட்பவெட்பம், மைனஸ் 30 டிகிரி

•ஆண்டுதோறும் சராசரியான மழைப்பொழிவு 100 மி.மீ


அதனால், 2013 ஆம் ஆண்டு, அவரும் செக்மோல் அல்டர்நேடிவ் பள்ளில் உள்ள அவரின் மாணவர்களும் இணைந்து, பனி உருவங்களை பியாங் நகரில் உருவாக்கத் துவங்கினர்.

அவர்கள் இதை, `ஸ்தூபங்கள்` என அழைக்கின்றனர். காரணம், அவை பார்ப்பதற்கு திபேத்தின் மத ஸ்தூபங்கள் போல, புத்த பிட்சுக்களின் பாகங்களை கொண்டுள்ள பீடம் போன்ற வடிவில் உள்ளன.

மிகவும் எளிதான கோட்பாட்டில் இவை இயங்குகின்றன. குழாய்கள், பனிகள் உருவாகும் இடத்தின் கீழே நிலத்தின் அடியில் புதைக்கப்படுகின்றன. அதன் கடைசி பகுதி மட்டும், பூமிக்கு வெளியே செங்குத்தாக நிற்கும் படி அமைக்கப்படுகிறது.

வித்தியாசமான உயரங்கள், தட்பவெட்பம் மற்றும் புவியீர்ப்பு விசையால், தண்ணீர் மேல் எழும்புகிறது. குழாய் மூலம் வெளியேறி வரும் தண்ணீர், நீரூற்று போல மாறுகிறது.

பூஜியத்திற்கும் கீழே, வெட்பநிலை குறையும்போது, அவை உறைந்து, முக்கோணம் போல காட்சியளிக்கின்றன.

"நாங்கள் பனிக்காலத்தில் பயன்படுத்தப்படாத தண்ணீரை உறைய வைக்கிறோம், இங்குள்ள வடிவியல் சூழல், வசந்த காலத்தின் இறதி நாட்கள் வரை, அவற்றை உருகாமல் பார்த்துகொள்கின்றன" என்கிறார் வாங்சுக்.

வசந்த கால இறுதியில், இந்த பாறை வடிவங்களை உருக்கி, பயிர்களின் சொட்டு நீர் பாசனத்திற்கு பயன்படுத்தலாம்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption பனிப்பாறைகளில் இருந்து வரும் நீரை நம்பியே லடாக் உள்ளது

இந்த பனி உருவங்கள், பிரபல மத ஸ்தூபங்கள் போல உள்ளதால், அங்குள்ள மக்களுக்கு இது நல்ல உரிமை உணர்வை அளிக்கும் என யங்சக் நம்புகிறார்.

2014 ஆம் ஆண்டு, பியாங்கில் வெற்றிகரமாக தங்களின் பனி உருவத்தை உருவாக்கியதற்கு பிறகு, அங்குள்ள புத்த துறவிகள், இந்த குழுவினரிடம் இது போன்ற 20 ஸ்தூபாக்களை உருவாக்கிதர கேட்டுள்ளனர். இதற்காக கூட்டு நிதியாக 125,200 டாலர்கள் திரட்டப்பட்டுள்ளது.

இந்த பணம், 2.3கி.மீ தூரத்திற்கு ஒரு குழாய் வழியை பியாங் மூலம் கொண்டு வருகிறது. இந்த குழாய் மூலம், 50 பனி உருவங்களை உருவாக்கலாம் எனவாங்சுக் நம்புகிறார்.

தற்போது, சுவிட்சர்லாந்தில் உள்ள செயிண்ட் மார்ட்டிஸ் பகுதியில், பனிக்கால விளையாட்டு அரங்கில், பனி உருவங்களை உருவாக்க, மக்களுக்கு உதவி வருகிறார் வாங்சுக்.

முதல்கட்ட வடிவங்கள் உருவாக்கப்பட்டு, சோதனைக்கு உள்ளாக்கப்பட்டதை தொடர்ந்து, சுவிஸ் மலைகளில் வேகமாக உருகிவரும் பனிப்பாறைகளை காக்கும் வகையில், இந்த திட்டத்தை சுவிட்சர்லாந்து விரிவு படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Rolex/ Stefan Walker

"பனி ஸ்தூபங்களில் தொழில்நுட்பத்தை கற்றுகொண்டதற்கு பதிலாக, நிலையான சுற்றுலாத் துறை முன்னேற்றங்களை கொண்டுவருவது குறித்த தங்களின் அனுபவங்களையும், நிபுணத்துவத்தையும் ஸ்விசர்லாந்து, பியாங் மக்களுடன் பகிர்ந்துகொள்ளும்" என்கிறார் வாங்சுக்.

அவர், வருங்காலத்தின் மீது மிக நேர்மறையாக எண்ணத்தை கொண்டுள்ளார்.

"நாங்கள், எங்களின் பல்கலைக்கழகத்தில், ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளிக்க விரும்புகிறோம். இதன் மூலம், பனி பாறைகளை முதலீடாக கொண்ட ஒரு தொழில் முனைவோர் தலைமுறையையே உருவாக்க முடியும் என நம்புகிறோம்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்