ரொஹிஞ்சாக்களின் ஆயுதக்குழு பற்றிய தகவல்

ரொஹிஞ்சாக்களின் ஆயுதக்குழு பற்றிய தகவல்

மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில், உண்மை கண்டறியும் ஐ.நா குழு தமது பயணத்தை தொடங்கவிருந்த சில மணி நேரத்துக்கு முன், அதை திடீரென மியான்மர் அரசு ரத்து செய்துள்ளது.

வன்முறை தீவிரமாகியுள்ள அந்தப் பிராந்தியத்தில் இருந்து சுமார் ஐந்து லட்சம் ரோஹிஞ்சாக்கள் தப்பித்து வங்கதேசத்துக்குச் சென்றுள்ளனர்.

ரக்கைனில் இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான மியான்மர் இராணுவம், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பதிலடி மட்டுமே கொடுப்பதாகக் கூறியுள்ளது.

இந்நிலையில் ரோஹிஞ்சா போராளிகளில் ஒருவர் என தன்னைக் கூறிக்கொள்ளும் நபரிடம் பிபிசி பேசியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :