ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமான குர்து இன யசிதிப் பெண்ணின் கண்ணீர் கதை

ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் சிக்கி தினசரி பாலியல் கொடுமைக்கு ஆளான பெண்

"ஆறு மாதங்கள் வரை தினமும் அவன் என்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தினான். தற்கொலை செய்துக் கொள்ள முயன்றேன்" என்று சொல்கிறார் குர்து இன யசிதிப் பெண் இக்லாஸ்.

தன்னைக் கடத்திச் சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகளின் குழுவினரிடம் ஆறு மாதங்கள் வரை பாலியல் அடிமையாக சிக்கித் தவித்திருக்கிறார் 14 வயது இக்லாஸ்.

2014 ஆம் ஆண்டில், குர்து இனத்தைச் சேர்ந்த யசீதி பிரிவினர் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய இலக்காக இருந்தார்கள். குர்து மொழி பேசுகின்ற இனச்சமயக் குழுவினரான யசீதி மக்கள், இராக்கின் வடக்குப் பகுதிகளில் பன்னெடுங்காலமாக வசிப்பவர்கள்.

இந்த இனத்தவர்களை பிடித்துச் செல்லும் இஸ்லாமிய தீவிரவாதிகள், ஆண்களை கொன்றுவிட்டு, பெண்களை கைதிகளாக பிடித்துச் செல்கின்றனர்.

பட மூலாதாரம், ARIS MESSINIS/AFP/Getty Images

படக்குறிப்பு,

மொசூலை விட்டு வெளியேறும் மக்கள்

ஐ.எஸ் அமைப்பு

சிஞ்சர் மலைகளுக்கு சென்றுவிட்டால், ஐ.எஸ் அமைப்பினரிடம் சிக்காமல் தப்பிக்கலாம் என்று இக்லாஸ் முயன்றிருக்கிறார். ஆனால் முயற்சி திருவினையாகும் முன்னரே அவர் பிடிபட்டார்.

பிணைக் கைதியாக இருந்தபோது, தீவிரவாதிகளில் ஒருவன், இக்லாஸை ஆறு மாதங்கள் தொடர்ந்து பாலியல் அடிமையாக வைத்திருந்தானாம்.

மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்

காணொளிக் குறிப்பு,

மொசூல் நகரெங்கும் மழலைகளின் அழுகுரல்

150 பெண்களில் இருந்து குலுக்கல் முறையில் பெண்களை தேர்ந்தெடுப்பார்கள் என்று ஐ.எஸ் அமைப்பினரின் அரக்கத்தனத்தை சொல்கிறார் இக்லாஸ்.

"அவன் மிகவும் அகோரமாக இருப்பான், நீண்ட தலைமுடியுடன் பார்ப்பதற்கு பெயரிட முடியாத விலங்கைப் போல் இருப்பான். உடலில் இருந்து வீசும் துர்நாற்றம் குடலைப் பிடுங்கியெடுக்கும். அவனைப் பார்த்தாலே உடல் அச்சத்தால் நடுநடுங்கும்" என்று அந்த கெட்டக் கனவை, கொடுமைகளை மீளாத்துயரை விவரிக்கிறார் இக்லாஸ்.

பட மூலாதாரம், FADEL SENNA/AFP/Getty Images

படக்குறிப்பு,

போரின் முக்கிய கட்டத்தில் மொசூல்

அகதிகள் முகாம்

கொடுமையில் இருந்து தப்பிப்பதற்காக, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த இக்லாஸுக்கு அதற்கான வாய்ப்பும் கிடைத்தது. தன்னை கொடுமைப்படுத்துபவன் சண்டைக்காக சென்றிருந்த ஒரு நாள், கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டார் இக்லாஸ்.

அங்கிருந்து தப்பித்துச் சென்று, அகதிகள் முகாம் ஒன்றில் சரணடைந்தார்.

சிக்கலும், துயரமும் நிரம்பிய அந்த கொடுமையான நாட்களை நினைவுபடுத்திச் சொல்லும்போதும் இக்லாஸின் உடல் நடுங்குகிறது. இந்த துயரங்களைச் சொல்லும்போது, கண்ணில் இருந்து கண்ணீர் வரவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறதா? கண்ணீர் வற்றிப்போய், கண்களே பாலைவனமாகிவிட்டது என்று மீளாத்துயர் கொள்கிறார் இக்லாஸ்.

ஜெர்மனியில் மனநல மருத்துவமனை ஒன்றில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இக்லாஸூக்கு கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது. படித்து, பெரிய வழக்கறிஞராக வேண்டும் என்று விரும்புகிறார் இக்லாஸ்.

மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை?

காணொளிக் குறிப்பு,

மீட்கப்பட்டது மொசூல் நகரம்: மீளுமா மக்கள் வாழ்க்கை?

பிற செய்திகள்

மொசூல்: மோசமான போரின் பிபிசி சாட்சியம்

காணொளிக் குறிப்பு,

மொசூல்: மோசமான போரின் பிபிசி சாட்சியம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :