சே குவேரா நினைவஞ்சலி: பொலிவிய அரசுடன் முரண்படும் முன்னாள் ராணுவத்தினர்

கியூ தலைவர் பிடல் காஸ்ரோவுடன், எர்னெஸ்டோ சே குவேரா. படத்தின் காப்புரிமை AFP
Image caption 1959ஆம் ஆண்டு கியூப புரட்சிக்கு நான்கு ஆண்டுகளுக்கு பின்பு, சே குவேரா (இடது) மற்றும் பிடல் காஸ்ட்ரோ (வலது).

கியூப புரட்சியாளர் எர்னஸ்டோ 'சே' குவேராவின், 50ஆவது நினைவு தினத்தை அனுசரிப்பது தொடர்பாக பொலிவிய நாட்டு அரசுக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் இடையே முரண்பாடு எழுந்துள்ளது.

பொலிவிய அரசு, வெளிநாட்டு விருந்தினர்களின் முன்னிலையில் சே குவேராவின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

சே வின் படையுடன் சண்டையிட்டவரும், மூத்த ராணுவ வீர்ர்களின் செய்தி தொடர்பாளருமான மாரியோ, மோரேரா, அரசின் நிகழ்ச்சியில் நாங்கள் பங்கெடுக்க மாட்டோம் என கூறியுள்ளார்.

அவர்கள், மறைந்த பொலிவிய குடிமக்களுக்குத் தாங்கள் அஞ்சலி செலுத்த உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

அரசின் அஞ்சலி நிகழ்ச்சியில், முன்னாள் ராணுவ வீரர்கள் பங்குகொள்வார்கள் என நம்புவதாக, அரசு கூறியுள்ளது.

கியூபாவின், மிக முக்கியமான சித்தாந்தவாதியான, சேகுவேரா , 1967ஆம் ஆண்டு, அக்டோபர் 8ஆம் தேதி, பிடிக்கப்பட்டு, அடுத்த நாள் பொலிவிய அரசு படையால், சுட்டுக்கொல்லப்பட்டார்.

லத்தீன் அமெரிக்காவின் பிற நாடுகளில், கொரில்லா படைகளை அமைப்பதற்காக அவர் கியூபாவை விட்டு வெளியேறியிருந்தார்.

மூத்த இராணுவ அதிகாரிகளின் பிரதிநிதியான மாரியோ, மோரேரா கூறுகையில், "அரசியல் ரீதியானது என கருதுவதால், நாங்கள் அரசின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்குகொள்ள மாட்டோம். நாங்கள் எப்படி, அவர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியும்?"

"மக்களின் பிரதிநிதியான பொலிவியா அரசு, எங்கள் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. நாங்கள் இந்த நாட்டை காத்ததோடு, எங்களில் 59 பேர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்".

1966 - 1967 இடையேயான காலகட்டத்தில், சேகுவேராவின் 47 வீர்ர்களை எதிர்த்து பொலிவிய ராணுவத்தினர் மிகவும் கசப்பான ஒரு சண்டையை நடத்தினர். அதன் இறுதிலேயே ,சே கைப்பற்றப்பட்டு, கொல்லப்படார்.

கியூபாவிற்கு, பொலிவியாவிற்கும் இடையேயான, "காயங்களை ஆறச்செய்யும்"வழியாக இந்த நினைவு அஞ்சலி நிகழ்ச்சி இருக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர், ரெமி ஃபெர்ரேரா கூறியுள்ளதை முன்னாள் ராணுவத்தினர் மறுத்துள்ளனர்.

எனினும், "பொலிவிய குடும்பங்களுக்கு வலிகளையும், துக்கத்தையும் அளித்த ஒரு வெளிநாட்டவருக்கு" அஞ்சலி செலுத்துவது தங்களால் முடியாது என மோரேரா தெரிவித்துள்ளார்.

"சே வெற்றிபெற்று இருந்தால், எங்கள் நாடு வித்தியாசமாக இருந்து இருக்கும். நாங்கள் செய்த பணியால் சட்டப்படியான அரசாங்கம் அமைக்கப்பட்டது".

முன்னாள் ராணுவத்தினர், போரில் இறந்த வீர்ர்களை நினைவு கோரும் வகையில் ஒரு பிராத்தனை கூட்டத்தில் பங்கெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

கியூபாவின் அரசியல் கூட்டணியில் உள்ள பொலிவியாவில் அதிபர் ஏவோ மொர்ராலஸின் இடதுசாரி ஆட்சி நடைபெறுகிறது. கியூபாவுடன் இந்நாட்டுக்கு நெருக்கமான அரசியல் ராஜீய உறவுகள் உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்