பெண் அரசியல் தலைவர்களால் பெண்கள் முன்னேற்றம் அடைகிறார்களா?

"கண்ணாடிக் கூரையின் மீது மிகப்பெரிய விரிசலை நாம் ஏற்படுத்தியுள்ளோம் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.. இங்கு பெண்கள் யாராவது இருத்தால் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருங்கள். நான் ஒரு வேளை அடுத்த பெண் அதிபர் ஆகலாம். அதற்கு அடுத்தது உங்களில் ஒருவர்தான்."

படத்தின் காப்புரிமை Sean Gallup
Image caption ஹிலாரி கிளிண்டன் (இடது) மற்றும் ஏங்கலா மெர்கல்

மேற்கண்ட வாசகங்கள், ஜூலை 2016-இல் ஜனநாயக கட்சியின் அமெரிக்க அதிபர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டபின், ஹிலாரி கிளிண்டன் கூறியவை.

ஆனால், இறுதியில் அந்தக் கண்ணாடிக் கூரையை நொறுக்க அவர் தவறிவிட்டார். தேர்தல் நடந்த தினதந்தன்று அவர் உரையாற்ற தேர்வு செய்த இடம் தற்செயலானது அல்ல.

நியூ யார்க் நகரிலேயே மிக பெரிய கண்ணாடிக் கூரையைக் கொண்ட கட்டடமாக 'ஜேவிட்ஸ் சென்டர்' கருதப்படுகிறது. ஒரு வேளை அந்தத் தேர்தலில் அவர் வெற்றி பெற்றிருந்தால், அமெரிக்க வரலாற்றில் முதல் பெண் அதிபராக அவரது வெற்றிப் பயணத்தைக் தொடங்க அவருக்கு அந்த இடம் மிகவும் பொருத்தமானதாக இருந்திருக்கும்.

ஆனால், ஹிலாரியின் தோல்வி தற்போதைய போக்குடன் ஒத்துப்போகவில்லை. ஏனெனில், உலக அளவில் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பெண் தலைவர்களின் எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் இரண்டு மடங்கு ஆகியுள்ளது.

உலகின் 15 நாடுகளுக்கு தற்போது பெண்கள் தலைமை பொறுப்பு வகிக்கின்றனர். அவர்களில் எட்டுப் பேர் தங்கள் நாட்டின் முதல் பெண் தலைவர்கள் ஆவார்கள் என்று பியூ ரிசர்ச் சென்டர் என்னும் அமைப்பின் ஆய்வு கூறுகிறது.

எனினும், ஐ.நா அவையில் உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில் 10% நாடுகளுக்குக் கூட பெண்கள் தலைமைப் பொறுப்பில் இல்லை.

படத்தின் காப்புரிமை DIPTENDU DUTTA
Image caption பெண் தலைவர்களுக்கு அதிக இலக்குகள் இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது

பெண் தலைவர்கள் நிச்சயமாக தடைகளைத் தகர்க்கிறார்கள். ஆனால், தங்கள் நாட்டின் பெண்களையும் தங்கள் வெற்றிப் பயணத்தில் உடன் அழைத்துச் செல்கிறார்களா? இந்தியாவின் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு இதில் ஒரு பார்வையைத் தரும்.

1993-ஆம் ஆண்டு முதல் மூன்றில் ஒரு பங்கு இந்திய உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதியாக பெண்களே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதன் மூலம் ஒரு இயல்பான சமூக பரிசோதனை நிகழ்த்தப்படுகிறது.

2012-இல் ஆயிரக்கணக்கான இந்திய வளர் இளம் பருவத்தினர் மற்றும் அவர்களின் பெற்றோரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், தங்கள் பகுதியில் பெண் தலைவரைக் கொண்டிருக்கும் கிராமப்புறப் பெண்களிடையே அதிகமான இலட்சியங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தலைமை பொறுப்பு வகிப்போரில் பெண்கள் எத்தனை சதவீதம் என தெரியுமா?

தங்கள் குழந்தையின் கல்வி எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பெரும்பாலான பெற்றோர்கள், பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளுக்கென்றே உயர்ந்த கனவுகளைக் கொண்டிருந்தனர்.

ஆனால், தொடர்ந்து இரு முறைக்கும் மேலாக பெண் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், ஆண் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலம் மீது பெற்றோர் கொண்டிருக்கும் 'கனவுகளின் இடைவெளி,' பெண்கள் தேர்வு செய்யப்படாத கிராமங்களைவிட 25% குறைவாக இருந்தது.

பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்ட மற்றும் தேர்வு செய்யப்படாத கிராமங்களைச் சேர்ந்த வளர் இளம் பருவத்தினரிடையே இந்த இடைவெளி 32% ஆக இருந்தது. பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் ஆண் குழந்தைகளின் எதிர்பார்ப்புகள் குறையவில்லை. ஆனால், பெண் குழந்தைகளுக்கு தங்கள் எதிர்காலம் பற்றிய கனவுகள் அதிகரித்து இருந்தது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மாதவிடாய் குறித்த கட்டுக்கதைகளை முறியடிக்கும் மடகாஸ்கர் பெண்கள்

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நிலையை கொள்கை முடிவுகள் மூலம் மாற்றுவதில் பெண் தலைவர்களுக்கு குறைவான வாய்ப்புகளே இருந்தன என்று அந்த ஆய்வை நடத்தியவர்கள் கண்டறிந்தனர். ஆனால், ஒரு நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முன்மாதிரியாக, அவர்களை சுற்றியுள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் கனவுகள் மற்றும் கல்வியை வளர்க்க, அவர்களின் இருப்பே போதுமானதாக இருந்தது.

தலைமைப் பொறுப்புகளில் இருக்கும் சூழ்நிலைகளில் தொலை தூரத்தில் இருந்தாலும், முன் மாதிரியாக இருக்கும் பெண் தலைவர்களால் பெண்களின் அணுகுமுறையை ஊக்குவிக்க முடியும் என்று 2012-இல் சுவிட்சர்லாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வின்போது மெய்நிகர் சூழலில் ஆண் மற்றும் பெண் மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒரு குழு இருந்த அறையில் ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கலின் படம் இருந்தது. இன்னொரு குழு இருந்த அறையின் சுவரில், அப்போது அமெரிக்க வெளியுறவு செயலராக இருந்த ஹிலாரி கிளிண்டனின் படம் இருந்தது.

படத்தின் காப்புரிமை KENA BETANCUR
Image caption ஹிலாரி தேர்தல் நாளன்று உரையாற்றிய நியூ யார்க்கில் உள்ள ஜேவிட்ஸ் சென்டர்

மற்ற இரண்டு குழுக்களில், ஒரு குழுவின் அறையில் பில் கிளிண்டனின் படம் இருந்தது. இன்னொரு குழுவின் அறையில் படம் ஏதும் இல்லை.

பெண் தலைவர்களின் படம் இருந்த அறையில் இருந்த குழுக்களில் இருந்த பெண்கள், ஆண் தலைவரின் படம் பார்த்த மற்றும் படம் எதுவும் பார்க்காத குழுக்களில் இருந்த பெண்களைவிடவும் தங்களை அதிகமாக சுயமதிப்பீடு செய்தனர். அதிகம் பேசினர்.

"பெண் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டும் சமத்துவத்துவத்தின் நோக்கம் மட்டுமல்ல, அதை இயக்கம் உந்து சக்தியாகவும் அந்த எண்ணிக்கை அதிகரிப்பு இருக்கும்," என்று அந்த ஆய்வாளர்கள் தங்கள் முடிவில் தெரிவித்துள்ளனர்.

பெண்கள் அரசியலின் தலைமை பொறுப்புகளில் இருப்பது மட்டுமே, அன்றாட வாழ்வில் சமத்துவத்தை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என்னும் கருத்தை நிலை நாட்டுவதற்கான ஆதாரங்க உள்ளன.

வோர்ல்டு எக்கனாமிக் ஃபோரம் (World Economic Forum) அமைப்பு உடல்நலம், ஆயுள், கல்வி மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் பங்கேற்பு ஆகிய காரணிகளின் அடிப்படையில் தயாரிக்கும் சர்வதேச பாலின இடைவெளி அறிக்கையில் நாடுகளை மதிப்பிடுகிறது.

2016-இல் பாலின இடைவெளி குறைவாக இருந்த, ஐஸ்லாந்து, பின்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளில் பெண்கள் அரசியலில் இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருந்தன. பெண்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் அதிகமாக இருக்கும் நாடுகளில் பெண்களின் முன்னேற்றமும் நல்ல நிலையில் இருப்பதை இது உணர்த்துகிறது.

அரசியலில் தலைமை பொறுப்புகளில் இருக்கும் பெண்களுக்கும் அவர்கள் நாட்டிலுள்ள பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதற்கும் தொடர்பு இருப்பதாக உறுதிபடக் கூற முடியவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சௌதி பெண்கள் வாகனம் ஓட்ட சட்டத்தடை நீங்கியது, சம்பிரதாய தடை நீங்குமா?

பெண் தலைவர்கள் இல்லாத நாடுகளிலில் கூட பாலின சமத்துவம் அதிகரித்துள்ளதும் இதற்கு ஒரு காரணமாகும். மிக சமீப காலத்திலேயே பெண்கள் அரசியல் பொறுப்புகளுக்கு தேர்வாகி இருப்பதும், தேர்வு செய்யப்பட்ட பெண்கள் குறைந்த காலமே பொறுப்பில் இருப்பதும் இன்னொரு காரணம் ஆகும்.

எது எப்படியோ, பொது வாழ்வில் பெண்கள் பெரும் வெற்றி அந்நாட்டில் உள்ள பெண்களின் கனவுகளைத் தூண்டும் வகையில் இருப்பதும், பெண் தலைவர்களைக் கொண்டுள்ள நாடுகள், அங்குள்ள பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதும் திண்ணம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :