பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ கதாநாயகன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ கதாநாயகன்

பிரிட்டனின் இரட்டை உளவாளியான கிம் ஃபில்பியின் வாழ்வையும் பணியையும் கவுரவிக்கும் புதிய கண்காட்சி ஒன்று மாஸ்கோவில் துவங்கியுள்ளது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபத்தி மூன்றாம் ஆண்டு அவர் சோவியத் உளவாளி என கண்டுபிடிக்கப்பட்ட பின் அவர் மாஸ்கோ தப்பிச் சென்றார்.

அவர் தேசத்துரோகி என பிரிட்டனில் கண்டிக்கப்பட்டார்.

ஆனால், சோவியத் ஒன்றியத்துக்கு அவர் முப்பதாண்டுகள் மதிப்புமிக்க சொத்தாக திகழ்ந்தார். சோவியத் யூனியன் சிதறுண்ட பின் நீண்டநாள் கழித்து நவீன ரஷியாவில் அவரது நினைவுகள் புதுப்பிக்கப்படுகின்றன.சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :