'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி

Image caption பேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி

கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார்.

ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின.

தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்குபின் தப்பிவிட பேடக் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீஸார் தொடர்ந்து மேலதிக தகவல்களை கூற மறுத்துவிட்டனர்.

திறந்தவெளி இசைக்கச்சேரி நிகழ்வில் பேடக் எதற்காக கொடூரமான துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகப் புலப்படவில்லை.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
துப்பாக்கிச்சூடு நடந்த போது போலீஸார் மக்களை பாதுக்காப்பான இடங்களுக்கு செல்லுமாறு கூச்சலிட்டனர்!

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிளார்க் கவுண்ட்டியின் ஷெரிஃப் ஜோ லொம்பார்டோ, விடுதியில் பேடக்கின் காரில் நிறைய வெடி பொருட்களை போலீஸ் கண்டுபிடித்ததாகவும், அதனோடு சுமார் 1,600 சுற்று துப்பாக்கித் தோட்டாக்களைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சில மணி நேரம் முன்பு பேடக் சூதாட்டம் விளையாடியுள்ளார்.

ஒருவாரத்திற்கு முன்புதான் லாஸ் வேகஸில் உள்ள ஒக்டென் விடுதியில், வேறொரு திறந்தவெளி இசை நிகழ்ச்சியை மேலிருந்து பார்க்கும் வகையில் ஓர் அறையை முன்பதிவு செய்திருந்தார் பேடக்.

அவருக்கு தீவிரவாதத் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று எஃப் பி ஐ தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) பிலிப்பைன்ஸ் விடுமுறை ஒன்றை முடித்துவிட்டு தானாகவே நாடு திரும்பிய டான்லி எஃப் பி ஐயிடம் பேசிய போது,பேடாக் இழைத்தது சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரமான வன்செயல் என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்