குழந்தைக்கு தடுப்பூசி போடமறுத்த தாய்க்கு சிறைத் தண்டனை

ரெபேக்கா பிரேடோ படத்தின் காப்புரிமை WXYZ
Image caption மகனுக்கு நோய் தடுப்பு மருந்து போட அனுமதிக்காத ப்ரேடோ

தனது மகனுக்கு தடுப்பூசி போட மறுத்த காரணத்தினால் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஏழு நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மிச்சிகனை சேர்ந்த ரெபேக்கா பிரேடோ இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவர் நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்ததற்காக தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

அவர்களது மகன் பிறந்த போது அவரும் அவரது முன்னாள் கணவரும் தங்கள் குழந்தைக்கு தடுப்பூசி போடவேண்டும் என முடிவு செய்தனர்.

ப்ரெடோவும் அவரது முன்னாள் கணவரும் கடந்த 2008ஆன் ஆண்டு பிரிந்த நிலையில் இருவரும் தங்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

நவம்பர் 2016ஆம் ஆண்டு தனது முன்னாள் கணவருடன் அவர் செய்து கொண்ட ஒப்பந்த்த்தில் தனது மகனுக்கு நோய்தடுப்பு மருந்து செலுத்துவதாக தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் தனது முன்னாள் கணவருடன் உடன்பட்ட நிலையில், தற்போது ரெபேக்கா பிரேடோ தனது ஒன்பது வயது மகனுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை போட அனுமதிக்க மறுத்து விட்டார்.

இந்நிலையில் அவரது முன்னாள் கணவர் தனது பிள்ளைக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என விரும்புகிறார்.

மிச்சிகனில் உள்ள பெற்றோர்கள் தங்களது தனிப்பட்ட நம்பிக்கையின் காரணமாக பிள்ளைகளுக்கு தடுப்பூசிகள் போடுவதை தவிர்க்கவோ அல்லது தாமதிக்கவோ சட்டரீதியாக அனுமதிக்கப்படுகிறார்கள்.

ஆனால், தம் கணவரோடு முன்பு செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறியதால்,

குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என நீதி்பதி தீர்ப்பு வழங்கினார். அவர் அதனை மீறியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே பிரேடோ தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது முன்னாள் கணவர் தங்கள் மகனை தற்காலிகமாக வைத்து கொள்ளவும், தடுப்பு மருந்து தரவும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அமெரிக்க இராணுவத்தில் திருநங்கை நம்பிகளுக்கு தடையால் கோபமும் குழப்பமும்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

  • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
  • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்