ரஷ்யாவில் படையினர் சமூக வலைதளங்களை பயன்படுத்த வருகிறது தடை

படத்தின் காப்புரிமை Oleg Nikishin/Getty Images

தொழில்முறை சிப்பாய்களும், பிற ராணுவ அதிகாரிகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக சமூக வலைதளங்களை பயன்படுத்துவதை தடை செய்யும் சட்ட மசோதா ஒன்றை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கியுள்ளது.

இணையதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படங்கள், காணொளிகள் மற்றும் இதர அம்சங்கள் எதிரிக்கு விவரங்களை அளிக்கக்கூடும் என்று இந்த மசோதா குறிப்பிடுகின்றது,

எடுத்துக்காட்டாக புவியில் இடம்காட்டும் தானியங்கி, ராணுவ படைப்பிரிவுகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்பதை காட்டக்கூடும்.

ரஷ்ய சிப்பாய்களால் பதிவேற்றப்பட்டுள்ள சமூக ஊடக பதிவுகள் உக்ரைன் மற்றும் சிரியாவில் படைப்பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ள தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த தடை அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :