அணு ஆயுத எதிர்ப்பிற்காக பணியாற்றிய அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

நோபல் குழு தலைவர் ரீஸ் -ஆண்டர்சன் படத்தின் காப்புரிமை HEIKO JUNGE/AFP/Getty Images
Image caption நோபல் குழு தலைவர் ரீஸ் -ஆண்டர்சன்

சர்வதேச அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழுவிற்கு (ஐ.சி.ஏ.என்), இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது

நோபல் பரிசுக் குழு தலைவர், பெரிட் ரீஸ்-ஆண்டர்சன் கூறுகையில், `அணு ஆயுதங்கள் மீதான, `ஒப்பந்த தடையை உருவாக்க சிறப்பான களப்பணி ஆற்றியமைக்காக` இந்த விருது என குறிப்பிட்டார்.

`அணு ஆயுதங்களின் பயன்பாடு ஆபத்தை ஏற்படுத்துமோ என்று கடந்த பல ஆண்டுகாலமாக நமக்கு இல்லாத பயம், தற்போதை காலகட்டத்தில்அதிகமாகவே இருக்கிறது` என அவர் தெரிவித்தார்.

அவர் வடகொரிய விவகாரத்தை மேற்கோள் காட்டினார்.

அணு ஆயுதம் வைத்துள்ள நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை அழிப்பது குறித்த பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை மாதம், ஐ.சி.ஏ.என் அளித்த அழுத்தத்தின் காரணமாக, 122 நாடுகள், படிப்படியாக அணு ஆயுதங்களை குறைத்து, தடை செய்யும் ஐ.நாவின் ஒப்பந்தத்தை எடுத்துக்கொண்டன. ஆனால், அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக அறியப்படும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.

நூற்றுக்கணக்கான தொண்டு நிறுவனங்களின் கூட்டணியான ஐ.சி.ஏ.என், 10ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு, ஸ்விட்சர்லாந்தின், ஜெனிவா நகரில் செயல்பட்டு வருகிறது.

இந்த குழு, டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விழாவில், 1.1மில்லியன் டாலர் பரிசு தொகை, நோபல் பதக்கம் மற்றும் பட்டயத்தை பெறும்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்

நோபல் பரிசின் சான்று, `சில நாடுகள் தங்களது, அணுஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. வட கொரியாவின் விஷயத்தில் நிருபிக்கப்பட்டது போல, பல நாடுகள் அணுஆயுதங்களை கொள்முதல் செய்யக்கூடிய ஆபத்து உள்ளது` என்கிறது.

வட கொரிய தலைவர் கிம்-ஜாங் உன், இந்த ஆண்டு பல ராக்கெட்டுகளை ஏவியதோடு, அணுஆயுத சோதனையையும் நடத்தினார். இது, அவருக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் இடையே சொற்போரை உருவாக்கியது.

கடந்த ஆண்டு வெற்றி பெற்றவரான , கொலம்பியாவின் அதிபர், ஹுவான் மான்வெல் சாண்டோஸ், அமைதிக்கான பரிசு, `சொர்க்கத்தில் இருந்து கிடைத்த விருது போல உள்ளது`, என்றார்.

அவரின் அரசு, அந்நாட்டின் முக்கிய கிளர்ச்சியாளர்கள் குழுவான ஃபார்க்கிடம் பேச்சுவார்த்தை மூலம் ஒப்பந்தத்தை கொண்டுவர முயன்றது.


அணுஆயுதத்தின் மாற்று அணுகுமுறை

ஆய்வு : ஜானத்தன் மார்கஸ், பிபிசி.

நோபல் குழுவின் முடிவு, அணுஆயுத எதிர்ப்பு குறித்த மசோதாக்களுக்கு சரியான நேரத்தில் வலுவூட்டும் வகையில் உள்ளன.

வடகொரியா தனது அணு திட்டத்தை மேம்படுத்தி வருவது, இரானின் அணுஆயுத திட்டம் நிலுவையில் உள்ளது, அமெரிக்க மற்றும் ரஷியா தனது அணுஆயுதங்களை நவீனப்படுத்தி வருகின்றன. இத்தகைய நிலையில், இந்த முடிவு வந்துள்ளது.

ஏற்கனவே, அணுஆயுதங்கள் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ், பெரும்பான்மையாக நாடுகள், அணுஆயுதங்களை உருவாக்க மாட்டேன் என்றும், ஏற்கனவே அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகள் படிப்படியாக அவற்றை அழிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முறைப்படி, ஏற்கனவே அணுஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் தங்களின் ஆயுதங்களை கைவிட முடியாது என்னும் விஷயம், பிரச்சாரகர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அதனால், ஐ.சி.ஏ.என் மாற்று அணுகுமுறையை கையாண்டது.இந்த விவகாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அணுஆயுதங்களுக்கு முழுமையாக தடைவிதிக்க கூடிய அரசிற்கு புதிய ஒப்பந்தகளை கையெழுத்திட செய்ய முடிவு செய்தது.


பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்