பாலியல் தொந்தரவு செய்யும் ஆண்களோடு செல்ஃபி எடுக்கும் கல்லூரி மாணவி

செல்ஃபி எடுக்கும் பெண்

தன்னை பாலியல் ரீதியில் கிண்டல் செய்யும் ஆண்களோடு செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறார் மாணவி ஒருவர்.

தெருவில் தொல்லைபடுத்துகின்ற ஒவ்வொரு நபருடனும் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றுகிறார் மாணவி நோவா ஜான்ஸ்மா

ஆம்ஸ்டர்டாமில் வாழ்ந்துவரும் இந்த 20 வயதான மாணவி இதை ஒரு மாத கால திட்டமாக செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த மாணவி நியூஸ்பீட்டிற்கு அளித்த பேட்டியில், ஓநாய் போல ஊளையிடுவதில் இருந்து, பாலுறவுக்கு அழைப்பது மற்றும் சில சமயங்களில் தெருவில் நிறுத்த பட்டுள்ளது வரை அவருக்கு பலவித அச்சுறுத்தல் வந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

"யாராவது என்னை ஏளனம் செய்தால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை.

நான் எதிர்ப்பு தெரிவித்தால், பரபரப்பு அதிகரித்தது, அந்நிலை எனக்கு உண்மையிலேயே பயத்தை கொடுக்கிறது. "

ஆண் தாங்கள் விரும்புவது எது வேண்டுமானாலும் செல்லிவிட்டு, எந்த விளைவுகளும் இல்லாமல் தப்பிவிடலாம் என்பதை விசித்திரமானதாக உணர்வதால், அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட விரும்பவில்லை என்று அவர் கூறுகிறர்ர்.

அதனால் நோவா அவர்களிடம் சுயப்படம் எடுத்துகொள்ளலாமா என கேட்க ஆரம்பித்தார். அவ்வாறு கேட்டபோது பலரும் " பெருமை " அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.

அவர்கள் கேட்டால் தவிர, எந்த புகைப்படம் எதற்காக எடுக்கப்படுகிறது என்று அவர் கூறுவதில்லை.

அவர்களில் ஒருவர் மட்டுமே கேட்டார். ஆனாலும் புகைப்படத்தை எடுத்துகொண்டார்.

நோவாவும், அவளுடைய தோழியரும் எதற்காக இவ்வாறு செயல்படுகிறார்கள் என்று அவளுடைய ஆண் நண்பர்களுக்கு எதுவும் புரியவில்லை.

"இது மிகவும் விசித்திரமானதாக தோன்றிது. மனித குலத்தில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு இதுவொரு அன்றாட வாழ்க்கைப் பிரச்சினையாகும், ஆனால், அதன் இன்னொரு பாதியாக இருக்கும் ஆண்களுக்கு இதுபற்றி தெரியாது.

"அதனால் தான் அதை உண்மையில் வெளிகாட்ட வேண்டிதான் இதனை செயல்படுத்த தொடங்கினேன்.

ஆண்கள் "அவமானம்" அடைவதற்காக இந்த முயற்சியை மேற்கொள்ளவில்லை என்கிற நோவா, ஒxரு செய்தியை சொல்ல விரும்புகிறார்.

"இந்த ஆண்கள் இன்ஸ்டாகிராமிலுள்ள பகைப்படத்தை எடுக்ககேட்டுக்கொண்டால், அதை நான் நீக்கி விடுவேன். காரணம், நான் அவர்களின் வாழ்க்கையை அழித்துவிட விரும்பவில்லை” என்று நோவா தெரிவிக்கிறார்.

"இது ஒரு கண்ணாடி பிரதிபலிப்பதை போன்றது, எல்லோருக்கும் முன்னால் அவர்கள் தெருவில் என்னுடைய அந்தரங்கத்திற்கு உள்ளே வருகிறார்கள், அதனால் நான் அவர்களின் அந்தரங்கத்திற்குள் செல்கிறேன்."

தங்களுடைய அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகதான் வாழ வேண்டும் என்று இந்த பிரச்சனையை கொண்டிருக்கும் பெண்களுக்கு இதனை வெளிப்படுத்தி, விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் என்று நோவா விரும்புகிறார்.

"இது ஒரு உலக அளவில் நிலவும் பிரச்சனை”

"அதனால்தான், யாருக்கும் எங்கும் இதுபோல நடக்கக்கூடும் என்பதால், வேறு நாட்டிலுள்ள இன்னொரு பெண்மணியிடம் மற்றும் மற்றொரு நகரத்தில் இந்த பக்கத்தை கொடுப்பேன்" என்று அவர் கூறுகிறார்.

பாஜக தலைவர் மகனிடம் இருந்து இளம் பெண் தப்பித்தது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஈவ்டீஸிங் பாதிப்புக்குள்ளான பெண்ணின் வாக்குமூலம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :