கத்தாரில் 2022 கால்பந்து உலகக்கோப்பை நடைபெறுவதில் சிக்கல் அதிகரிப்பு

அரசியல் ரீதியான சிக்கல்களால், 2022 உலகக்கோப்பை விளையாட்டுகள் கத்தார் நாட்டால் நடத்தப்படாமல் போகலாம் என, அந்த திட்டத்தின் சூழலை ஆராய்ந்த ஒரு ரகசிய அறிக்கை தெரிவிக்கிறது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption 2022 கால்பந்து உலகக்கோப்பைக்காக 9 புதிய அரங்குகளை கட்ட கத்தார் அரசு முயன்று வருகிறது.

பிபிசியால் பெறப்பட்டுள்ள, மேலாண்மை அலோசக நிறுவனமான `கார்னர்ஸ்டோன் கிளோபல்` நடத்திய ஆய்வின் முடிவுகள், கத்தார் மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையே உள்ள நெருக்கடியின் தாக்கத்தை விளக்குகின்றன.

அந்த ஆவணம், உலகக்கோப்பை விளையாட்டுகளுக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பில் கட்டுமான பணிகளை செய்துவரும் நிறுவனங்களுக்கு, இது மிகவும் சிக்கலான திட்டம் என்ற எச்சரிக்கையை விடுக்கிறது.

உலகக்கோப்பை பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களும், அந்த பகுதியில் கைதேர்ந்தவர்களும் கூட, கத்தார் இந்த விளையாட்டை நடத்துவதற்கான தீர்க்கமான வாய்ப்பு மிக குறைவாக உள்ளது என்று கூறுவதாக, இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

இருந்தபோது, 2022ஆம் ஆண்டு கத்தார் விளையாட்டின், விநியோகம் மற்றும் மரபுரிமை உச்சக்குழுவின் அறிக்கையில், `மத்திய கிழக்கு நாடுகளின் முதல், கால்பந்து உலகக்கோப்பை நிகழ்ச்சியை நடத்துவதில் நிச்சயம் எந்த சிக்கலும் இல்லை` என தெரிவித்துள்ளது.

`தற்போது அண்டை நாடுகள், கத்தாருடனான உறவை துண்டித்து, தடுத்துள்ள சூழலால், உலகக்கோப்பைக்கான ஆயத்த பணிகள் பாதிக்கவில்லை` என்று கூறியுள்ளதோடு, இந்த ஆய்வறிக்கையின் உள்நோக்கத்தின் மீதும் கேள்வி எழுப்பியுள்ளது.

பின்னணி

2010ஆம் ஆண்டு, சர்ச்சைக்குறிய வகையில், ஃபிஃபா, 2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை விளையாட்டை கத்தாரிடம் அளித்தது. கோடைகாலங்களில் அந்நாட்டில் வெப்பநிலை மிக அதிகமாக இருக்கும் என்பதால், போட்டிகள் குளிர்காலத்திற்கு மாற்றப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images

மதரீதியான ஒற்றுமைக்கு சான்றாக இந்த நிகழ்ச்சி அமையும் என அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில், கடந்த ஜூன் மாதம், மத்திய கிழக்கு நாடுகளை வலுவிழக்க செய்து, தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக கூறி, சவுதி அரேபியா, பெஹ்ரைன், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை கத்தாருடனான உறவை துண்டித்துக் கொண்டன.

குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்ததோடு, தடைகளை நீக்குவதற்காக போட்ட நிபந்தனைகளையும் நிராகரித்தது கத்தார்.

கத்தாருடனான தரைவழி போக்குவரத்தை சவுதி அரேபியா மூடியுள்ளது. மற்ற நான்கு நாடுகளும், கத்தாருடனான வான்வழி மற்றும் கடல்வழி போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

ஆய்வறிக்கை

கார்னர்ஸ்டோன் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களிடம், கடினமான மற்றும் சவாலான சூழல்களில் வணிகத்தை தொடர்வது குறித்த தனிப்பட்ட நுண்ணறிவை அளிக்குமாறு கேட்கிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அல்பீனிஸத்தை எதிர்க்கும் கால்பந்து அணி

`கவனிக்கப்படும் கத்தார்: 2022 ஃபிஃபா உலகக்கோப்பை ஆபத்தில் உள்ளதா?` என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கையில், ` திட்டமிட்டபடி விளையாட்டுகள் நடக்குமா, நடக்காதா என்று தெரியவில்லை என மேற்கத்திய தூதர்கள் பலர் தனிப்பட்ட முறையில் தெரிவித்தனர்` என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

`இதற்கு பல காரணங்கள் உள்ளன, விளையாட்டை நடத்த உரிமைகோரியதில் நடந்த ஊழல் மற்றும் உட்கட்டமைப்பு பணிகளில் உள்ள ஊழல்களும் இதில் அடங்கும் என்கிறது அந்த அறிக்கை.

`கத்தாரில் தற்போது உள்ள அரசியல் நெருக்கடியை பார்க்கும் போது, கத்தாருக்கு எதிரான இயக்கம் உருவாகியுள்ளதை பார்க்க முடிவதோடு, இந்த உலகக்கோபையை நடத்துவதில், அதற்கு அதிக அழுத்தம் உள்ளதையும் பார்க்க முடிகிறது.

`இது, 2022ஆம் ஆண்டு உலகக்கோப்பை விழாவின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் கோருவோராக இருந்தாலும், பணிகளை செய்து வருபவராக இருந்தாலும், அவர்களுக்கான ஊதியத் தொகை கிடைக்காமல் போகக்கூடிய சிக்கல் உள்ளது.

`தற்போதுள்ள அரசியல் சூழலுக்கு, 2022 உலகக்கோப்பை கத்தாரில் நடக்காமல் போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

`விளையாட்டுகள் ரத்தாகும் நிலை வந்தால், அவை திடிரெனவே நடக்கும். மேலும், எளிதில் சரிசெய்ய முடியாத ஒரு நிலையற்ற நிலைக்கு ஒப்பந்ததாரர்களை அது தள்ளிவிடும்`.

உலகக்கோப்பைக்காக கட்டுமான பணிகளை கவனித்து வரும் நிறுவனம் தற்போதுவரை எந்த பதட்டமும் அடையவில்லை என்றாலும், கத்தார் மீது உள்ள தடைகளின் தாக்கத்தை உணர்ந்துள்ளது. அந்த தடையால், கட்டுமான தளவாடங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், அண்டை நாடுகள், எல்லை பகுதிகளை மூடுவதால், தங்களின் பணிகளை செய்வதில் கடினத்தை உணர்கின்றன` என அந்த அறிக்கை கூறுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆளில்லா விமானத்தோடு எலியும் பூனையும் விளையாட்டு - காணொளி

தளவாடங்கள் கிடைப்பதில் உள்ள பிரச்சனைகளால், 20 முதல் 25 சதவிகிதம் வரையில் விலை உயர்ந்துள்ளதாக, பல சிறிய-ரக பல்நாட்டு நிறுவனங்களில், அரசின் ஒப்பந்தத்தோடு, உலகக்கோப்பை கட்டுமான பணிகளுக்காக வேலை செய்யும் ஐந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

`அதிக செலவு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணங்களுக்காக, கத்தார் உச்சக்குழுவில் உள்ள பல உறுப்பினர்களை பதவி விலகக்கோரி, உயர் அதிகாரிகளால் மிரட்டப்படுவதாக, விளையாட்டுப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் கூறினார்`, என்றும் கார்னர்ஸ்டோன் கூறுகிறது.

கத்தாரில் பதில் என்ன?

அந்த ஆய்வை மேற்கொண்ட அமைப்பு கத்தார் மீது தடைகளை விதித்துள்ள நாடுகளுடன் வெளிப்படையாக தொடர்பில் இருக்கிறது என்றும் ஊடக செய்திகள் மற்றும் அநாமதேயமாணவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும் இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கத்தார் தரப்பில் பிபிசியிடம் கூறப்பட்டுள்ளது.

இந்த போட்டி நடைபெறுவது தொடர்பாக சந்தேகங்களை உண்டாக்கி, கத்தார் நாட்டு குடிமக்கள் மத்தியில் சீற்றத்தையும், வெளிநாட்டு தொழில் முனைவோர் மத்தியில் பதற்றத்தையும் உண்டாகும் முயற்சி நகைப்புக்குரியது என்று கத்தார் மறுத்துள்ளது.

`அந்த ஆய்வறிக்கையின் தலைப்பை தவிர, மத்திய கிழக்கில் முதல் உலகக்கோப்பை நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை`.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செளதி மன்னரின் தங்கத்திலான தானியங்கி படிக்கட்டு சொதப்பிய தருணம்

கார்னர்ஸ்டோன், இந்த அறிக்கை, `பெரிய ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டது` என்றும், இதற்காக எந்த நிறுவனமோ, அரசோ நிதியளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஒளிபரப்புவதில் உள்ள கவலைகள்

இதனிடையே, உலக கால்பந்து அமைப்பான ஃபிஃபா, பிபிசி விளையாட்டு செய்திப்பிரிவிடம் பேசுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள விளையாட்டுகளை ஒளிபரப்புவது குறித்து, கத்தாரின் பி.இன் நிறுவனத்திடம் பேசி வருவதாக கூறியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவுள்ள அந்த நிறுவனம், ஒளிபரப்பிற்கு தேவையான தளவாடங்கள் நாட்டினுள் வருவது தடுக்கப்படுமோ, பணிகளுக்காக வருபவர்கள், பணி செய்ய விடாமல் தடுக்கப்படுவார்களோ என்று கவலை கொண்டுள்ளதாக அறியப்படுகிறது. ஃபிஃபா, சூழ்நிலையை கவனித்து வருவதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :