ஏவுகணையை வானத்திலேயே அழிக்கும் ஆயுதம்: சௌதிக்கு விற்கிறது அமெரிக்கா

அமெரிக்காவின் நவீன ஏவுகணை பாதுகாப்பு அமைப்பான "அதிவுயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் "தாட்" (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை சௌதி அரேபியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த 15 பில்லியன் டாலர் மதிப்புடைய வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை நலன்களை மேம்படுத்தியுள்ளதாக அமெரிக்க ராஜீயத் துறை தெரிவித்திருக்கிறது.

சௌதிக்கும், வளைகுடாவுக்கும் இரான் மற்றும் பிற பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பை இந்த 'தாட்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அதிகரிக்கும் என்று அது கூறியுள்ளது.

வான்வெளி பாதுகாப்பு அமைப்புக்களை ரஷ்யாவில் இருந்து வாங்குவதற்கு சௌதி அரேபியா ஒப்பு கொண்ட மறுநாள் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அந்த பிராந்தியத்தில் காணப்படும் ராணுவ சமநிலையை மாற்றிவிடாது என்று அமெரிக்க முப்படைகளின் தலைமை அலுவலகமான பென்டகனின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவில் எதிர்ப்பு

வட கொரியாவால் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் ஏவுகணை தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பு அளிப்பதற்காக அமெரிக்காவின் 'தாட்' ஏவுகணை அமைப்புகள் தென் கொரியாவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

படத்தின் காப்புரிமை EPA

ஆனால், இதற்கு பல தென் கொரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு பொருத்தப்படும் இடங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் என்பதால் அதற்கு அருகில் வாழும் மக்களின் வாழ்க்கை ஆபத்திற்குள்ளாகும் என்ற அச்சத்தால் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென் கொரியாவில் தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை நிறுவது பிராந்திய பாதுகாப்பு சமநிலையை பாதிக்கும் என்று கூறி சீனாவும் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பரந்து விரிந்த ரோஹிஞ்சாமுகாம்: ஆளில்லா விமானம் எடுத்த திகைக்கவைக்கும் படம்

'தாட்' ஏவுகணை அமைப்பின் சிறப்புகள்

குறுகிய மற்றும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை அவை தாக்குவதற்கு பறந்து வரும்போது இறுதி நிலையில் சுட்டு தாக்கி அழித்துவிடும்.

ஏவுகணை முகத்தில் தாங்கிவரும் ஆயுதங்களை தாக்கி, அழித்துவிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அந்த ஆயுதங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

200 கிலோ மீட்டர் தூரம் பாயும் 'தாட்' அமைப்பு, 150 கிலோ மீட்டர் உயரம் வரை செல்லும்.

வட கொரியாவில் இருந்து ஏவப்படலாம் என்று எதிர்பார்க்கக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராக குவாம் மற்றும் ஹவாயில் அமெரிக்கா தாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை ஏற்கெனவே நிறுவியுள்ளது.

கொரியாவில்'தாட்' அமைப்பின் பாதிப்பு

தாக்கவரும் ஏவுகணைகளை புவியின் வளிமண்டலத்துக்கு மேலேயே எதிர்கொண்டு அழித்துவிடும் இந்த 'தாட்' ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும்.

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்டின் 'தாட்' இடைமறிப்பு அமைப்பைத் தயாரிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :