ஐந்தாண்டுகளாக தாலிபன் பிடியில் இருந்த அமெரிக்க குடும்பத்தை விடுவித்தது பாக். ராணுவம்

கடந்த ஐந்து ஆண்டுகளாக தாலிபன் தீவிரவாதிகள் பிணைக்கைதியாக பிடித்துவைத்திருந்த ஐந்துபேர் கொண்ட வட அமெரிக்க குடும்பம் ஒன்றை பாகிஸ்தான் படையினர் விடுவித்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானில் பயணம் மேற்கொண்டிருந்த போது, கனடாவை சேர்ந்த ஜோஷுவா போயில் மற்றும் அவரது அமெரிக்க மனைவி கெய்ட்லன் கோல்மேன் ஆகியோர் தாலிபன்களால் கடத்தப்பட்டனர். தம்பதியர் பிணைக்கைதியாக இருந்தபோது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.

ஆஃப்கன் எல்லையை ஒட்டிய பகுதியில் அமெரிக்கா அரசாங்கம் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது அது கொடுத்த ரகசிய தகவலையடுத்து குடும்பத்தினர் மீட்கப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

மீட்பு நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா-பாகிஸ்தான் உறவில் இது ஒரு நம்பிக்கையளிக்கும் தருணம் என்று கூறியுள்ளார்.

''பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு, அந்நாட்டில் இன்னும் அதிக பாதுகாப்பு வழங்கவேண்டும் என்ற அமெரிக்காவின் விருப்பத்தை அங்கீகரிப்பதன் குறியீடாக உள்ளது'' என்று மேலும் அவர் தெரிவித்தார்.

தம்பதியர் பிணைக்கைதியாக வைக்கப்பட்ட போது, தாலிபன் ஆதரவு ஹக்கானி நெட்வெர்க் என்ற தொலைக்காட்சியில் தம்பதியர் குறித்த காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. ஆஃப்கானிஸ்தானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தரப்பைச் சேர்ந்த மூவரை விடுவிக்குமாறு தம்பதியை கடத்திய தாலிபன்கள் கோரிக்கை விடுத்து வந்ததனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்