கிர்குக்கில் போர் பதற்றம்: இராக் படைகளை எதிர்கொள்ள தயாராகும் குர்து போராளிகள்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிர்குக் நகரை எந்த நிலையிலும் அதனை பாதுகாக்க வேண்டும் என்று குர்து பெஷ்மெரகா போராளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் பிரச்சனைக்குரிய நகரமான கிர்குக்கிலுள்ள முக்கிய பகுதிகளிலிருந்து குர்து போராளிகள் வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் மத்திய அரசு விதித்திருந்ததாக கூறப்படும் ஒரு காலக்கெடு முடிந்துவிட்டது.

இந்த காலக்கெடு ஞாயிறு அதிகாலை வரை விதிக்கப்பட்டிருந்ததாக குர்து பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், காலக்கெடு வழங்கப்பட்டதாக கூறப்படுவதை இராக் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

காலக்கெடு இன்னும் 24 மணி நேரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பினரும் தங்கள் படையினரை கிர்குக்கிற்கு அனுப்பியுள்ளன. இச்சூழலில், ஏற்கனவே குர்து போராளிகள் மற்றும் இராக் மத்திய அரசை ஆதரிக்கும் ஷியா போராளிகள் இடையே சிறியளவிலான மோதல் சம்பவங்கள் வெடித்துள்ளன.

இராக்கிய படைகள் பெஷ்மெரகா நகரில் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதனை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்துவதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக அங்குள்ள குர்து போராளிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் குர்து இனத்தவர்கள் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியதையடுத்து பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று இராக் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்