31 வயதிலேயே ஆஸ்திரிய நாட்டின் தலைவராகும் ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் யார்?

ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஆஸ்திரிய நாட்டின் வேந்தராகவுள்ள ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ்

ஆஸ்திரியாவின் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி சமீபத்தில் நடந்து முடிந்த நாட்டின் பொதுத் தேர்தலில் அதிக சதவீத வாக்குகளையும், இடங்களையும் வென்றுள்ளது. இதையடுத்து அந்தக் கட்சியின் தலைவரான ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் நாட்டின் வேந்தராகவுள்ளார். செபாஸ்டினுக்கு வயது 31.

மக்கள் கட்சியானது 31 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை வென்று முன்னணியில் உள்ளது . இரண்டாவது இடத்தைப் பிடிக்கப்போவது சமூக ஜனநாயக கட்சியா அல்லது சுதந்திர கட்சியா என்பதில் இதுவரை தெளிவற்ற நிலை நிலவுகிறது

ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மைக்குக் குறைவான இடங்களே வென்றுள்ளதால் அகதிகளுக்கு எதிரான போக்கைக் கடைபிடிக்கும் சுதந்திர கட்சியின் கூட்டணியை ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் நாடலாம்.

இந்த வெற்றி குறித்து ஆதரவாளர்களிடம் பேசிய ஜெபாஸ்டியன் '' இது நாட்டில் மாற்றத்துக்கான நேரம். இந்த நாட்டை மாற்றுவதற்கு இன்று நமக்கு ஒரு வலுவான கட்டளை இடப்பட்டுள்ளது. இதை சாத்தியதாக்கிய உங்கள் எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

யார் இந்த ஜெபாஸ்டியன் கூர்ட்ஸ் ?

  • இந்தத் தேர்தலுக்கு முன்னதாக ஐரோப்பாவின் மிக இளவயது வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார் குர்ஸ். கடந்த 2013 ஆம் ஆண்டு அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியமர்த்தப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27.
  • கடந்த மே மாதம் மக்கள் கட்சியின் தலைவரானார் கூர்ட்ஸ் இவர் தனது அரசியல் வாழ்க்கையை கட்சியின் இளைஞர் பிரிவில் இருந்து தொடங்கினார். அவர் கட்சியின் இளைஞர் பிரிவுக்கு தலைமை வகித்தார். அதன் பின்னர் வியன்னாவின் நகர சபையில் பணியாற்றினார்.
  • ஜெபாஸ்டியனுக்கு 'வுண்டர்வுஜ்ஜி' என்றொரு செல்லப்பெயரும் இருந்தது. அந்தப் பெயரின் அர்த்தம் '' தண்ணீரிலும் நடக்கக்கூடியவன்''.
  • பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் மற்றும் கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ருடோ ஆகிய இளம் தலைவர்களுடன் இவர் ஒப்பிடப்படுகிறார்.
  • மேக்ரோனை போலவே குர்ஸும் தன்னைச் சுற்றி இரு இயக்கத்தைத் உருவாக்கினார். மக்கள் கட்சியை மறுசீரமைப்பு செய்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்