ஆண்களை பழிவாங்கும் பெண் பேயை நம்பும் கிராமம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண் பேய் பயத்தில் தெலங்கானா கிராமம்: இரவில் ஊர் தங்காத ஆண்கள்

காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம்.

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் நிர்மல் மாவட்டத்திலுள்ள இந்த கிராமத்தில் 60 குடும்பங்கள் வாழ்கின்றன. அனைவரும் இந்த கிராமத்தில் பேய் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.

கடந்த 3 மாதங்களில் இங்குள்ள 3 பேர் திடீரென இறந்திருப்பது, இங்கு பெண் பேய் உலவுகிறது என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

இங்கு உலவுவது பெண் பேய் என்றும், அது ஆண்களை குறிவைத்துப் பழிவாங்குவதாகவும் நம்பப்படுகிறது.

அதனால், இரவு நேரத்தில் ஆண்கள் யாரும் கிராமத்தில் இருப்பதில்லை. பேய் பயத்தால் இதுவரை 12 குடும்பங்கள் இங்கிருந்து வெளியேறியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்