பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை...

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செய்தியை படிக்க: வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்


சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ஐந்தாண்டு ஆட்சியில், சீனா பணக்கார மற்றும் வலிமைமிக்க நாடாக மாறியுள்ளது. இதனால், சாதாரண சீன குடும்பத்திற்கு என்ன கிடைத்திருக்கிறது?

செய்தியை படிக்க:ஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்


படத்தின் காப்புரிமை Getty Images

ஆளும் பாரதிய ஜனதா கட்சியில் உள்ள ஒரு அரசியல்வாதி, தாஜ்மஹால், `இந்திய கலாச்சாரத்திற்கு ஒரு கறை` என்றும், அதை `துரோகிகள் கட்டினர்` எனவும் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தின் சுற்றுலா தலங்கள் குறித்த கையேடுகளில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்ட பின்பு வருகின்ற கருத்துக்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், இணையத்தில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை படிக்க: `தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது`: பாஜக எம்.எல்.ஏ கருத்தால் வலுக்கும் சர்ச்சை


படத்தின் காப்புரிமை linkedin

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. இங்குள்ள அரசு ஊழலில் ஈடுபட்டதாக விமர்சித்த பிரபல பதிவர் டாஃப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார்.

செய்தியை படிக்க: மால்டாவில் அரசை விமர்சித்த வலைப்பதிவர் கார் குண்டு வெடித்து பலி


தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களுடன் மெர்சல், மேயாத மான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.

செய்தியை படிக்க: திரையரங்குகளில் புதிய கட்டணங்கள் அறிவிப்பு: மெர்சல் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியீடு


படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் காதல் சின்னமாகப் பரவலாக கருதப்படும் தாஜ்மஹாலை எதற்காக பா.ஜ.க தலைவர்கள் குறி வைக்கிறார்கள்? அவர்கள் காதலுக்கு எதிரானவர்களா?

செய்தியை படிக்க: பா.ஜ.க தலைவர்கள் காதலுக்கு எதிரானவர்களா?


படத்தின் காப்புரிமை Reuters

இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர்.அந்த நகர் மீட்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செய்தியை படிக்க: ஐ. எஸ் அமைப்புக்கு இன்னொரு தோல்வி: வீழ்ந்தது ரக்கா


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பறவைகளுக்காக பட்டாசுகளை மறந்த கிராமங்கள்

பறவைகளின் குதூகலம்தான் தங்களுக்கு ஆனந்தம் என்று உறுதியாக நம்பும் கிராம மக்கள், அதற்காக ஆண்டுதோறும் தீபாவளி தினத்தன்று பட்டாசுகளைக் கொளுத்தாமல் அமைதியாக, தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். (காணொளி)


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆர்செனிக்

தண்ணீரில் இருக்கும் ஆர்செனிக் நச்சுத்தன்மையால் வங்கதேசத்திலும், இந்தியாவிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்ஹஜ் செளத்ரி என்பவர் பிசின் மணிகளை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்துவதுடன் மக்களுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீரை வழங்கி வருவது பற்றிய காணொளி.


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இஸ்லாமிக் யோகா

குஜராத்தின் ஒரு முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் `இஸ்லாமிக் யோகா` என்ற பெயரில், யோகா பயிற்சியை மேற்கொண்டு தங்கள் உடல் நலனை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள். (காணொளி)


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்