பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று செவ்வாக்கிழமை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை C.W.Evans/Georgia Tech

130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் நடந்த பிரம்மாண்ட மோதல் தங்கம், பிளாட்டினம் போன்ற உலோகங்கள் எப்படி உருவாயின என்ற ரகசியத்தைப் போட்டு உடைத்துள்ளது.

செய்தியை படிக்க: தங்கம் உருவானது எப்படி? நியூட்ரான் நட்சத்திர மோதலில் வெளியான ரகசியம்


படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா பற்றிய நாடகம் ஒன்றை உருவாக்கிய பிரிட்டன் தொலைக்காட்சி நிறுவனத்தை குறிவைத்து வட கொரிய ஹேக்கர்கள் இணையத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

செய்தியை படிக்க: வட கொரியா பற்றி நாடகம்: தொலைக்காட்சி மீது இணையத் தாக்குதல்


சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் ஐந்தாண்டு ஆட்சியில், சீனா பணக்கார மற்றும் வலிமைமிக்க நாடாக மாறியுள்ளது. இதனால், சாதாரண சீன குடும்பத்திற்கு என்ன கிடைத்திருக்கிறது?

செய்தியை படிக்க:ஷி ஜின்பிங் ஐந்தாண்டு ஆட்சி: சீனா பெற்றதும் இழந்ததும் 5 அட்டவணையில்


படத்தின் காப்புரிமை ICC

தரங்க ,சந்திமால், மலிங்கா, மேத்யூஸ் உள்ளிட்ட வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தானில் விளையாட மறுத்துள்ளனர்.

செய்தியை படிக்க: இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா?


தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களுடன் மெர்சல், மேயாத மான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.

செய்தியை படிக்க: திரையரங்குகளில் புதிய கட்டணங்கள் அறிவிப்பு: மெர்சல் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியீடு


படத்தின் காப்புரிமை Getty Images

உலகின் காதல் சின்னமாகப் பரவலாக கருதப்படும் தாஜ்மஹாலை எதற்காக பா.ஜ.க தலைவர்கள் குறி வைக்கிறார்கள்? அவர்கள் காதலுக்கு எதிரானவர்களா?

செய்தியை படிக்க: பா.ஜ.க தலைவர்கள் காதலுக்கு எதிரானவர்களா?


படத்தின் காப்புரிமை linkedin

தெற்கு ஐரோப்பாவில் உள்ள நாடு மால்டா. இங்குள்ள அரசு ஊழலில் ஈடுபட்டதாக விமர்சித்த பிரபல பதிவர் டாஃப்னே கருவானா கலிஜியா கார் குண்டு வெடித்துப் பலியானார்.

செய்தியை படிக்க: மால்டாவில் அரசை விமர்சித்த வலைப்பதிவர் கார் குண்டு வெடித்து பலி


தமிழக அரசு அறிவித்துள்ள புதிய கட்டணங்களுடன் மெர்சல், மேயாத மான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்கள் நாளை வெளியாகின்றன.

செய்தியை படிக்க: திரையரங்குகளில் புதிய கட்டணங்கள் அறிவிப்பு: மெர்சல் உள்ளிட்ட படங்கள் நாளை வெளியீடு


படத்தின் காப்புரிமை Reuters

இஸ்லாமிய அரசு என தன்னை அழைத்துகொள்ளும் குழுவின் தலைநகரமாக இருந்த ரக்காவில் தற்போது சில டஜன் கிளர்ச்சியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் அந்தப் படையினர் கூறுகின்றனர்.அந்த நகர் மீட்கப்பட்டது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை விரைவில் எதிர்பார்க்கலாம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

செய்தியை படிக்க: ஐ. எஸ் அமைப்புக்கு இன்னொரு தோல்வி: வீழ்ந்தது ரக்கா


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நியூட்ரான் நட்சத்திரங்கள்

நெடுந்தூரத்தில் அதாவது பூமியில் இருந்து பல ஆயிரம் பில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால், கேலக்சி எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதியதை ஒரு ஆய்வகம் கண்டறிந்துள்ளது.


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
உலகின் சிறந்த ஆசிரியை யார் தெரியுமா?

வார்கி அறக்கட்டளையின் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆசிரியராக மேகி மெக்டோனல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக அளவில் மதிப்புமிக்க இந்த விருதை வெல்ல காரணம், இவர் கனேடிய ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் ஆசிரியராக பணிபுரிவதுதான்.


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆர்செனிக்

தண்ணீரில் இருக்கும் ஆர்செனிக் நச்சுத்தன்மையால் வங்கதேசத்திலும், இந்தியாவிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்ஹஜ் செளத்ரி என்பவர் பிசின் மணிகளை பயன்படுத்தி தண்ணீரை சுத்தப்படுத்துவதுடன் மக்களுக்கு குறைந்த விலையில் சுத்தமான குடிநீரை வழங்கி வருவது பற்றிய காணொளி.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்