கற்பனை கலையால் உன்னத படைப்பாகும் உடைசல்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காயலான் கடை சரக்கு கலையாகும் அற்புதம் (காணொளி)

  • 18 அக்டோபர் 2017

தும்பி, கிளி, காளை, ஒட்டகச்சிவிங்கி இந்தச் சிற்பங்கள் எல்லாம் எப்படி உருவாக்கப்படுகின்றன என்று தெரியுமா?

பழைய இரும்பு சாமான்கள், தண்ணீர் டிரம்கள், பழைய வாகன உதிரி பாகங்கள் இப்படி அழகிய சிற்பங்களாக உருமாறியுள்ளன.

பழைய இரும்பு சாமான்களைக் கொண்டு செய்யப்பட்ட இந்த சிற்பங்களைவைத்து ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு கிருஷ்ண புஷ்கரம் விழாவின்போது இந்த பூங்கா நிறுவப்பட்டது. இப்பொழுது அமராவதி வளர்ச்சி அணையம் இதன் பராமரிப்பை பார்த்துக்கொள்கிறது.

மாநகராட்சியை அழகு செய்யும் ஒரு திட்டத்தின்கீழ் இந்த சிற்பங்கள் பசுமை சூழ்ந்த இடத்தில், மின் விளக்குகள் மத்தியில் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த பூங்கா அதிக போக்குவரத்து நிறைந்த பகுதியில் இருப்பதால் பார்ப்பவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

கையில் கலையும் மனதில் கற்பனையும் இருந்தால் உடைசல் கூட உன்னத படைப்பாகும்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்