பியர் திருவிழாவில் வெடிகுண்டு சதி: மலேசியாவில் மூவர் கைது

  • 17 அக்டோபர் 2017

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருந்த பியர் திருவிழாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்யத் திட்டமிட்டிருந்த மூன்று பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டு காவல் துறையினர் கூறியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption மலேசிய போலீசார் (கோப்புப்படம்)

கடந்த செவ்வாயன்று அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 30 மீட்டர் சுற்றளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் திறன் கொண்ட பல வெடிக்குண்டுகள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாகவும் மலேசிய காவல் துறை தலைவர் முஹமத் ஃபூஜி ஹாரூன் கூறியுள்ளார்.

எட்டு பேரை காயமடையச் செய்த, கடந்த ஆண்டு நடைபெற்ற, மலேசிய இரவு விடுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்ட ஐ.எஸ் அமைப்பினருடன் அவர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கருதப்படுகிறது.

குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் ஒழுங்கீனம் ஆகியவை அதிகரிக்கும் என்று இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்ததை தொடர்ந்து கோலாலம்பூர் பியர் திருவிழா ஏற்கனவே ரத்து செய்யப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்