பிபிசி தமிழில் இன்று...

பிபிசி தமிழில் இன்று புதன்கிழமை 1 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

தற்போது ஆக்ராவில் இருப்பது போலவே மற்றொரு தாஜ்மஹாலை கட்ட ஷாஜஹான் கட்ட விரும்பியதாக கூறுகிறது உ.பி. அரசின் தாஜ்மஹால் குறித்த இணைய தளம். ஒரே வித்தியாசம், இப்போது இருப்பதைப் போல வெண் பளிங்கு நிற தாஜ்மஹால் இல்லை, அவர் கட்ட விரும்பியது கருப்பு நிற தாஜ்மஹால்.

செய்தியைப் படிக்க: கறுப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்?

8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி.

படத்தின் காப்புரிமை Getty Images

இரான், லிபியா, வடகொரியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் பயணிகளை அனுமதிப்பதில் பல கட்டுப்பாடுகளை, தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு அந்நாட்டு நீதிபதி ஒருவர் தடை விதித்துள்ளார்.

செய்தியைப் படிக்க: 8 நாடுகளில் இருந்து அமெரிக்கா வர டிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி

படத்தின் காப்புரிமை Reuters
Image caption ஷி ஜின்பிங்.

வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பியடிக்கக்கூடாது என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசும்போது குறிப்பிட்டார் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்.

செய்தியைப் படிக்க: வெளிநாட்டு அரசியல் அமைப்புகளை சீனா காப்பி அடிக்கக்கூடாது: ஷி ஜின்பிங்.

படத்தின் காப்புரிமை Getty Images

தாஜ்மகால் இந்தியா மீது படிந்திருக்கும் கரை என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறிய கருத்துகள் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இது குறித்து "வாதம் விவாதம்" என்ற புதிய பகுதியில் வாசகர்களிடம் கருத்து கேட்டது பிபிசி தமிழ் சேவை. வாசகர்கள் கூறிய முக்கிய பதில்கள் தொகுக்கப்பட்டு இச் செய்தியில் அளிக்கப்பட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: #வாதம் விவாதம்: தாஜ்மஹால் காதல் சின்னமா, இல்லையா?

காசிகூடா கிராமத்தில் இரவில் ஆண்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை. கிராமத்தில் பெண் பேய் நடமாடுவதாக நம்புவதுதான் இதற்கு காரணம். இது குறித்த காணொளி:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
ஆண்களை பழிவாங்கும் பெண் பேயை நம்பும் கிராமம்
படத்தின் காப்புரிமை Twitter

கடந்த ஓரிரு தினங்களாக #MeToo என்னும் ஹாஷ்டேக் வைரலாகி வருகிறது. ஆண்களால் ஏதோவொரு வகையில் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் #MeToo என்னும் ஹாஷ்டேகை பதிவிட்டும், அதனுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்தும் வருகிறார்கள்.

இது குறித்த செய்திக்கு: வைரலாகி வரும் #MeToo ஹாஷ்டேக்! காரணம் என்ன?

படத்தின் காப்புரிமை Getty Images

#மீடூ பதிவுகள், ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்க துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் பாலியல் தாக்குதல்கள் குறித்து எழுத்த துவங்கினர். இது குறித்த செய்திக்கு: பெண்களை பாதுகாப்பாக உணரச் செய்யும் ஆணா நீங்கள்?

சர்வதேச கால்பந்து நட்சத்திரமாகியுள்ளார் ஆப்கன் அகதி. இவர் டென்மார்க் மற்றும் போர்ட்லேண்டுக்காக கால்பந்து ஆடுகிறார். இது குறித்தக் காணொளி:

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சர்வதேச கால்பந்து நட்சத்திரமான ஆப்கன் அகதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்