27 ஆண்டுகளுக்கு பிறகு இராக்கிற்கு சௌதி விமான சேவை

கடந்த 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு சௌதி வர்த்தக விமானம், இராக் தலைநகர் பாக்தாத்தில் தரையிறங்கியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

1990-ஆம் ஆண்டு சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து இராக் உடனான விமான சேவைகளை சௌதி அரேபியா நிறுத்தியது.

ஆனால், அரபு பிராந்தியத்தில் இரானின் செல்வாக்கு அதிகரித்து வருவதைத் தடுக்கும் நோக்கில், இராக் உடன் நெருங்கிய தொடர்புகளை வைத்துக்கொள்ள சமீப காலமாக சௌதி அரேபியா முயன்று வருகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெப்பக் காற்று பலூன், திரவம், மாவு - பெய்ஜிங்கில் தடை ஏன்?

1990-இல் மூடப்பட்ட, அரார் பகுதியில் அமைந்திருக்கும், இரு நாடுகள் இடையேயான தரைவழி எல்லையை மீண்டும் திறக்க திட்டமிட்டுள்ளதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளும் அறிவித்தன.

இராக்கில் உள்ள பிற நகரங்களுக்கும் தங்கள் சேவை விரிவுபடுத்தப்படும் என்று நம்புவதாக ஃப்ளைநாஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :