மாடல் கொலை வழக்கு: பாகிஸ்தானில் மதகுரு கைது

பாகிஸ்தானில் சமூக வலைதள பிரபலம் கண்டீல் பலோச் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், பிரபல இஸ்லாமிய மதகுரு முஃப்தி அப்துல் காவி கைது செய்யப்பட்டுள்ளார். கண்டீலின் கொலை பாகிஸ்தானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கண்டீல் பலோச்

எதிரெதிர் விமர்சனங்களை பெற்ற, உணர்வுகளைத் தூண்டும் வகையிலான செல்ஃபி படங்களை இணையத்தில் பதிவேற்றியதன் மூலம் அவர் புகழ் வெளிச்சம் பெற்றார்.

முல்தானில் உள்ள அவரது இல்லத்தில் கழுத்து நெரிக்கப்பட்டு நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் சடலமாக அவர் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது சகோதரர் முஹமத் வசீம் அவரைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முஃப்தி அப்துல் காவி

கொலை செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் முஃப்தி அப்துல் காவியுடன் ஹோட்டல் அறையில், அவரின் குல்லாவை அணிந்துகொண்டு, உதடுகள் விரிந்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை கண்டீல் வெளியிட்டிருந்தார்.

அதன் பின்னர் அவர் முறையற்று நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நஃப் ஆற்றை கடந்து வங்கதேசத்திற்கு தப்பி செல்லும் ரோஹிஞ்சாக்கள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்