பிபிசி தமிழில் இன்று...

  • 18 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

வீரப்பனை சுட்டுக்கொன்ற தமிழக சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை தாங்கியவரும், உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட தனது அனுபவங்களை புத்தகமாக எழுதியுள்ளார்.

செய்தியைப் படிக்க: 20 நிமிடங்களில் முடிந்த வீரப்பனின் 20 ஆண்டுகால சாம்ராஜ்யம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தலைநகரை இழந்த ஐ.எஸ் அமைப்பினர்..!

சொர்க்க வட்டம் என அழைக்கப்படும் ரக்கா நகரின் மையப்பகுதியில்தான், ஐ.எஸ் அமைப்பினர் மக்களின் தலையை துண்டித்து கொன்றனர். ஆனால் தற்போது அந்த பகுதி முழுவதும் அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படையினரின் கொடி பறக்கிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானில் சமூக வலைதள பிரபலம் கண்டீல் பலோச் கடந்த ஆண்டு கொல்லப்பட்ட வழக்கில், பிரபல இஸ்லாமிய மதகுரு முஃப்தி அப்துல் காவி கைது செய்யப்பட்டுள்ளார்.

செய்தியை படிக்க: மாடல் கொலை வழக்கு: பாகிஸ்தானில் மதகுரு கைது

படத்தின் காப்புரிமை Getty Images

1990-ஆம் ஆண்டு சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து இராக் உடனான விமான சேவைகளை சௌதி அரேபியா நிறுத்தியது.கடந்த 27 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு சௌதி வர்த்தக விமானம், இராக் தலைநகர் பாக்தாத்தில் தரையிறங்கியுள்ளது.

செய்தியை படிக்க: 27 ஆண்டுகளுக்கு பிறகு இராக்கிற்கு சௌதி விமான சேவை

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெப்பக் காற்று பலூன், திரவம், மாவு - பெய்ஜிங்கில் தடை ஏன்?

வெப்பக் காற்று பலூன்கள், ஏர் பி.என்.பி. விடுதிகள், திரவம், மாவுப் பொருள்கள் போன்றவற்றை ஏன் சீனத் தலைநகர் பெய்ஜிங் தடை செய்துள்ளது?

தெரிந்து கொள்ள இந்தக் காணொளியை பாருங்கள்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "என்னுடைய சொந்த நாட்டிலேயே அதுபோன்ற பயத்தை நான் உணர்ந்ததில்லை" என்று அக்ம்பே பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கென்ய தேர்தல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ஒருவர், கென்யாவில் அடுத்த வாரம் நடைபெற உள்ள தேர்தலை நம்பிக்கைக்குரிய வகையில் நடத்த இயலவில்லை என்று கூறி தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

செய்தியை படிக்க: அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற கென்ய தேர்தல் அதிகாரி

படத்தின் காப்புரிமை AFP

குர்திஸ்தான் சுதந்திர தனி நாடு வாக்கெடுப்புக்கு மக்கள் அமோகமாக ஆதரவளித்த வாக்கெடுப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், குர்து இன மக்கள் வாழும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இராக் அரசு ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

செய்தியைப் படிக்க: குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இந்தியாவிற்கு பட்டாசு அறிமுகமானது எப்படி?

தீபாவளியன்று இந்தியர்களால் கொண்டாட்டத்துடன் வெடிக்கப்படும் பட்டாசை கண்டுபிடித்தது யார்? பட்டாசு எப்படி இந்தியாவிற்கு அறிமுகமானது என்பதை காட்டும் காணொளி.

படத்தின் காப்புரிமை Hindustan Times

தென்னிந்தியாவில் உள்ள மாநிலமான கேரளாவைச் சேர்ந்த அந்தப் பெண் கூறுகையில் சொந்த விருப்பத்தின் பெயரில்தான் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாக குறிப்பிடுகிறார்.

செய்தியைப் படிக்க: நீதிமன்றத்தின் பிடியில் இருக்கும் 'லவ் ஜிஹாத்' திருமணம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மிகவும் மாசுப்படுவது ஏன்?

ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியில் காற்று மிகவும் மாசுப்படுவது ஏன்? இதற்கும் வட மாநில விவசாயிகளின் செயலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்