இறந்த சிப்பாயை அவமதித்ததால் டிரம்ப்புக்கு பாதிப்பு ஏன்: 5 முக்கிய காரணங்கள்

ஆப்ரிக்க நாடான நைஜரில் இஸ்லாமியவாதத் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையில், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கொல்லப்பட்ட அமெரிக்க ராணுவ வீரர் சர்ஜண்ட் லா டேவிட் ஜான்சனின் மனைவிக்கு ஆறுதல் கூறும் விதமாக அவருடன் தொலைபேசியில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்ட்டு டிரம்ப், அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் முறையற்ற வகையில் பேசியதாக, மறைந்த ராணுவ வீரர் ஜான்சனின் தாய் கொவாண்டா ஜோன்ஸ் ஜான்சன் கூறியது சர்சையைக் கிளப்பியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதிபரின் தொலைபேசி உரையாடலின்போது, இறந்த ராணுவ வீரரின் மனைவி மையிஷியா ஜான்சனின் அருகில் இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர், ஃபிரெட்ரிகா வில்சன் , அதிபர் டிரம்ப் தொலைபேசியில் '' சரி, உனது கணவருக்கு அவர் என்ன மாதிரியான வேலையில் ஈடுபடுகிறார் என்பது தெரியும். ஆனால் எப்படியிருந்தாலும் இது (அவரது மரணம்) உங்களை காயப்படுத்தும் என யூகிக்கிறேன்.'' என சொன்னதாக தெரிவித்துள்ளார்.

நாட்டுப்பற்று மிக்கவராகவும், அமெரிக்காவின் புகழை மீண்டும் நிலைநாட்டுபவராகவும் தம்மை எப்போதுமே காட்டிக்கொள்ளும் டிரம்பின் பெயருக்கு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அவரின் நற்பெயருக்கு இது ஏன் சேதாரத்தை விளைவிக்கும் என்பதற்கான ஐந்து முக்கிய காரணங்கள் இதோ.

உடையும் 'நண்பன்' எனும் பிம்பம்

படை வீரர்களுக்கு வீரர்களுக்கு, குறிப்பாக ஓய்வு பெற்ற படை வீரர்களுக்கு தன்னை உற்ற நண்பனாகவே எப்போதும் டிரம்ப் காட்டிக்கொள்வார். பதவிக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் முப்படை வீரர்கள் தம்மை சூழ்ந்திருக்கும் நிகழ்வுகளை அடிக்கடி வெளிக்காட்டி, அவர்கள் தம்மை மிகவும் நேசிப்பது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிக்கொண்டார். முன்னாள் படை அதிகாரிகளை தனது நிர்வாகத்தில் முக்கிய பணிகளில் அமர்த்தினார்.

அவர்களுக்கு போதிய தற்காப்பு வழிமுறைகள் வழங்கப்பட்டிருந்தால், அவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள் எனும் கேள்வி ஏற்கனவே எழுந்துள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் தொடர்பு கொண்ட 11 இறந்த முன்னாள் படை வீரர்களின் குடும்பத்தினரின் ஏழு பேரின் குடும்பத்தினர், டிரம்ப் தங்களைத் தொடர்பு கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர். மறைந்த ஒரு வீரரின் தந்தை டிரம்ப் தங்களுக்கு 25,000 டாலர் தருவதாக உறுதியளித்ததாகவும் இன்னும் அதைச் செய்யவில்லையென்றும் கூறியுள்ளார். இதே போன்று உறுதியளிக்கப்பட்ட நான்கு மறைந்த வீரர்களின் குடும்பங்களின் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் டிரம்ப்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தலைநகரை இழந்த ஐ.எஸ் அமைப்பினர்..!

வெளிப்படும் டிரம்பின் பலவீனம்

இயற்கை பேரிடர் உள்ளிட்ட சூழ்நிலைகளில் அமெரிக்க அதிபர் ஆறுதல் சொல்பவராக இருக்க வேண்டும் என்பது தற்காலத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது.

போர்டோ ரிக்காவை சூறாவளி தாக்கியபோது, அப்பிராந்தியத்தை நிர்வகிப்பதில் அமெரிக்காவுக்கு உண்டாகும் பொருளாதார சிக்கல்கள் குறித்து பேசினார் டிரம்ப். சார்லட்ஸ்வில் இனவெறி தாக்குதலின்போது, இரு தரப்பினர் மீதும் தவறுள்ளதாகக் கூறினார்.

படத்தின் காப்புரிமை CBS News/US Army
Image caption கொல்லப்பட்ட ஜான்சனின் உடல் உள்ள சவப்பெட்டியை பிடித்து அழும் அவரது மனைவி

மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களின் மனைகளைத் தொடும் வகையில் பேசுவதை எதிர்-அரசியல் செய்யும் டிரம்ப் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை.

மோசத்தை படு மோசமாக்குகிறது

நைஜரில் அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு 12 நாட்கள் கழித்துதான் டிரம்ப் இது குறித்து பேசவே செய்தார். தாமதத்திற்கான காரணத்தை கேட்டபோது, முன்னாள் அமெரிக்க அதிபர்கள் உடனே இறந்தவர்களின் குடும்பத்தை அழைத்துப் பேசினார்களா என்று எதிர் கேள்வி கேட்டார்.

இராக்கில் அமெரிக்காவின் முப்படைத் தலைவர் ஜான் கெல்லியின் மகன் கொல்லப்பட்டபோது அப்போதைய அதிபர் பராக் ஒபாமா அவரை அழைத்துப் பேசினாரா என்று கெல்லியிடமே பொது வெளியில் கேட்டார் டிரம்ப்.

ஒபாமா கெல்லியை அழைத்துப் பேசவில்லை என்று வெள்ளை மாளிகை கூறினாலும், ஒபாமா நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இறந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்ட அஞ்சலி நிகழ்ச்சியில் கெல்லி கலந்துகொண்டது பின்னர் தெரிய வந்தது.

வெள்ளை மாளிகையின் செயல்பாடு ஒழுங்காக உள்ளதா?

படை வீரர்கள் கொல்லப்பட்ட அக்டோபர் 4-க்கு அடுத்த நாளே அதிபரின் இரங்கல் செய்தி தயார் செய்யப்பட்டது. ஆனால், அது வெளியிடப்படவில்லை.

இறந்த படை வீரர்களின் பெயர்களை வெளியிடுவதற்கு விதிமுறைகள் பின்பற்றற்றப்பட வேண்டும் கூறினார் வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலர் சாரா ஹக்கபீ சேண்டர்ஸ்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அரைக்கால் அணிந்ததால் தாக்கப்பட்ட துருக்கி பெண்

எங்கேயோ தவறு நடந்திருக்கிறது என்கிறார் முன்னாள் பாதுகாப்பு செயலர் லியோன் பனெட்டா. இந்த விடயங்கள் ஒன்றை மட்டும் தெளிவாக்குகிறது. நைஜரில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட செய்தியின் முழு விவரங்களையும் அறியாமலேயே டிரம்ப் அவர்களிடம் பேசியுள்ளார்.

இன்னொரு கவனச் சிதறல்?

அமெரிக்க பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இம்மாத இறுதிக்குள் வரி குறைப்புக்கான ஒப்புதலை காங்கிரசில் டிரம்ப் பெறவில்லை என்றால், வரும் வாரங்கள் அவருக்கு சிக்கலாக அமையும்.

ஜனநாயக கட்சியினர் இதை பணக்காரர்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று கூறி வரும் நிலையில், இது குறித்து பொது மக்களிடம் டிரம்பின் குடியரசு கட்சியினர் ஆதரவு திரட்ட வேண்டி இருக்கும்.

ஆனால், இறந்த ராணுவ வீரரின் விவகாரத்தில் டிரம்ப் இப்போதே அவப்பெயரை சம்பாதித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்