பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

நாட்டுப்பற்று மிக்கவராகவும், அமெரிக்காவின் புகழை மீண்டும் நிலைநாட்டுபவராகவும் தம்மை எப்போதுமே காட்டிக்கொள்ளும் டிரம்பின் பெயருக்கு இந்த விவகாரம் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

செய்தியைப் படிக்க: இறந்த சிப்பாயை அவமதித்ததால் டிரம்ப்புக்கு பாதிப்பு ஏன்: 5 முக்கிய காரணங்கள்

படத்தின் காப்புரிமை Google

"தவறான நடவடிக்கைகளை ஆதரிக்காதீர்கள் என விஜய் ரசிகர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஜி.எஸ்.டியைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம்? இம்மாதிரி கருத்துக்களைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது," என்று தமிழிசை கூறினார்.

செய்தியைப் படிக்க: ஜி.எஸ்.டி வரியை விமர்சிக்கும் மெர்சல் திரைப்படம்: பாஜக தலைவர் எதிர்ப்பு

படத்தின் காப்புரிமை Reuters

ஆசியாவில் சீனாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதை எதிர்கொள்ள, இந்தியாவுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.

செய்தியைப் படிக்க: இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா

படத்தின் காப்புரிமை EPA
Image caption தாக்குதலுக்கு பின்பு, சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனையிடும் இராணுவ் அதிகாரி

ஆப்கானிஸ்தானின் தென் மாகாணமான கந்தஹாரில் உள்ள ராணுவ தளத்தை குறிவைத்து, தாலிபனின் இரண்டு தற்கொலைப்படையினர் தாக்கியதில், குறைந்தது 43 ஆப்கன் படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

செய்தியைப் படிக்க: ஆப்கன் ராணுவ தளம் மீது தாலிபன் தற்கொலைப்படை தாக்குதல்: 43 பேர் பலி

படத்தின் காப்புரிமை EPA
Image caption சோப்சாக்

2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக்

செய்தியைப் படிக்க: ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக்

கடந்த சில நாட்களில் மொபைல் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளை அனுப்புகின்றன.

செய்தியைப் படிக்க: உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வங்கி அழுத்தம் கொடுக்கிறதா?

Image caption இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் வாழ வீடுமில்லை, செல்வதற்கு வேறிடமுமில்லை.

இந்தியாவின் நிலக்கரி தலைநகரத்தில் மழை பெய்துகொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பூமியும் சேர்ந்து நடுங்க ஆரம்பித்தது.

செய்தியைப் படிக்க: இந்தியாவின் 'தீ நகரத்தின்' நரக வாழ்க்கை

பிரான்சில் உள்ள சூரியவிசைத் தகடு பொருத்திய இந்த சுமார் 1 கி.மீ. நீளமுள்ள சாலை மின்சாரம் உற்பத்தி செய்து தேசிய மின் தொகுப்புக்கு வழங்குகிறது. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சூரிய விசை மின்சாரம் தயாரிக்கும் சாலை

சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துக்கொண்ட கம்யூனிஸ்ட் பிரதிநிதிகளிடம், வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னை பற்றி என்ன நினைக்கிறார்கள் என பிபிசி செய்தியாளர்கள் கேட்டார். அதற்கு அவர்கள் என்ன பதிலளித்தார்கள் தெரியுமா? (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சீனா

துருக்கியில் அரைக்கால் சட்டை அணிந்ததால் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி வெளியானது அங்கு பெரும் விவாதத்தையும் பல போராட்டங்களையும் உருவாக்கியது. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
அரைக்கால் அணிந்ததால் தாக்கப்பட்ட துருக்கி பெண்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :