மாசுபாடுகளால் அதிக இறப்பு ஏற்படுவதில் இந்தியாவுக்கு 5வது இடம்

2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தேோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று "த லென்செட்" மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது. அத்துடன் உலக அளவில் மாசுபாடுகளால் அதிக இறப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறுகின்ற நாடுகளில் நிகழ்ந்துள்ள ஏறக்குறைய எல்லா இறப்புக்களிலும் 25 சதவீதம் வரையான இறப்புக்கள் மாசுபாடுகளால் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதில், வங்கதேசமும், சோமாலியாவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுபாடு காரணமாக மூன்றில் இரண்டு பகுதியினர் இறந்து பெரிய பாதிப்பை காற்று மாசுபாடு ஏற்படுத்தியுள்ளது.

புருணை மற்றும் ஸ்வீடனில் மாசுபாடு காரணமாக மிக குறைவான இறப்புகள் நேரிடுகின்றன.

இதய நோய், பக்கவாதம் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற மாசுபாடுகளோடு தொடர்புடைய, பிறருக்கு தொற்றிக்கொள்ளாத நோய்களின் மூலம் பெரும்பாலான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன.

சுற்றுச்சூழலில் சந்திக்கும் சவால்களைவிட மாசுபாடு மேலானது. மனித ஆரோக்கியம் மற்றும் நலவாழ்வின் பல அம்சங்களை பாதிக்கின்ற ஆழமான மற்றும் பரவலான அச்சுறுத்தலை இது வழங்குகின்றது என்று நியு யார்க்கில் சீனாய் மலையிலுள்ள இகான் மருத்துவ கல்லூரியை சேர்ந்த இந்த ஆய்வை வழிநடத்திய பேராசிரியர் பிலிப்பு லன்ரிகான் தெரிவித்துள்ளார்.

மிக பெரிய ஆபத்துக்குரிய காரணியாக விளங்கும் காற்று மாசுபாடு, 6.5 மில்லியன் பேரை இயற்கையாக இறப்பதற்கு முன்னாலேயே இறப்பதற்கு காரணமாகிறது.

வாயுக்கள் போன்ற வெளிப்புற ஆதாரங்கள், விறகு எரிப்பது அல்லது நிலக்கரி பயன்பாடு போன்ற வீடுகளில் இருந்து வெளிவரும் மாசுபாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.

அடுத்த மிக பெரிய ஆபத்துக்குரிய காரணியான நீர் மாசுபாடு. இது 1.8 மில்லியன் நபர்களின் இறப்புக்கு பங்காற்றியுள்ளது. அதேவேளையில் வேலையிடங்களில் காணப்படும் மாசுபாட்டோடு தொடர்புடையதாக 8 லட்சம் இறப்புகள் உலக அளவில் நிகழ்ந்து வருகின்றன.

இதில். இந்தியா போன்ற விரைவாக பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இடங்களில் உணரப்படும் பெரிய பாதிப்புகளை கொண்டிருக்கும் ஏழை நாடுகளில் 92 சதவீத இறப்புகள் நிகழ்கின்றன.

படக்குறிப்பு,

பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த அமலாகும் புதியதொரு ஒப்பந்தம் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது - ஆய்வாளர்கள்

மாசுபாடுகளால், அதிக இறப்புகள் ஏற்படுவதில் இந்தியா 5வது இடத்திலும், சீனா 16வது இடத்திலும் உள்ளன.

பிரிட்டனில் சுமார் 8 சதவீத அல்லது 50 ஆயிரம் இறப்புகள் மாசபாடுகளால் நிகழ்வதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கை, இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ள 188 நாடுகளில் ஐக்கிய ராஜ்ஜியத்தை 55வது இடத்தில் வைத்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க் உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்கு பின்னர் ஐக்கிய ராஜ்ஜியம் தள்ளப்பட்டுள்ளது.

"காற்று மாசுபாடு உலக அளவில் நெருக்கடி நிலையை எட்டியுள்ளது. மேற்கு ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பல நாடுகளை விட மோசமாக ஐக்கிய ராஜ்ஜியம் இருந்து வருகிறது" என்கிறார் பிரிட்டிஷ் லுங் நிறுவனத்தின் மருத்துவர் பென்னி வுட்ஸ்.

டீசல் வாகனங்களில் அதிக சார்பு, நச்சு துகள்கள் மற்றும் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றுவது ஆகியவை இதற்கு அதிக பற்காற்றும் காரணிகளாக இருக்கலாம்.

மக்களை மோசமான நுரையீரல் நிலைமையில் வாழும் மக்கள், குழந்தைகள் மற்றும் முதியோரை இவை கடினமாக தாக்குகின்றன.

அமெரிக்காவில் 5.8 சதவீதத்திற்கு மேல் அல்லது ஒரு லட்சத்து 55 ஆயிரம் இறப்புகள் மாசுபாடோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

ஏழை நாடுகளிலுள்ள ஏழைகள், பணக்கார நாடுகளிலுள்ள ஏழைகள் உள்பட ஏழைகளை பாரபட்சமான முறையில் காற்று மாசுபாடு பாதிப்பதாக ஆய்வு நடத்தியோர் தெரிவித்துள்ளனர்.

அரசு சாராத நிறுவனமான 'ப்யுர் எர்த்'-ஐ சேர்ந்த ஆய்வு ஆசிரியர் கார்டி சான்டில்யா இது பற்றி தெரிவிக்கையில், "மாசுபாடு, மோசமான ஆரோக்கியம் மற்றும் சமூக அநீதி ஆகியவை மிகவும் ஆழமாக பின்னிப் பிணைந்தவை" என்கிறார்.

"வாழ்க்கான உரிமை, உடல் நலம், நலவாழ்வு, பாதுகாப்பான வேலை, குழந்தைகள் மற்றும் மிகவும் பாதிக்கப்படுவோரின் பாதுகாப்பு போன்ற அடிப்படை மனித உரிமைகளை மாசுபாடு அச்சுறுத்துகின்றது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளன. அந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்கள் தங்களுடைய தரவுகளை விளக்குகின்ற ஊடாடும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :