பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Google
Image caption செஸ் விளையாட்டை விட கோ விளையாட்டில் அதிகமான நகர்வுகளுக்கான வாய்ப்புகள் உள்ளன.

இந்த மென்பொருள் 72 மணிநேரத்தில் முதலில் வடிவமைக்கப்பட்ட மென்பொருளை 100க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெல்லும் அளவுக்கு செயல்பட்டது.

செய்தியைப் படிக்க: சீன விளையாட்டில், மனிதர்களைத் தோற்கடிக்கும் செயற்கை அறிவுத் தொழில்நுட்பம்

படத்தின் காப்புரிமை Reuters
Image caption லபிதா நோங்கோ

ஹார்வியின் அறைக்கு சென்றவுடன் அவர் தனக்கு மசாஜ் செய்து விட வேண்டும் என்று கூறியபோது, அவர் விளையாட்டாக சொல்கிறார் என்று நினைத்ததாக லபிதா கூறியுள்ளார்.

செய்தியைப் படிக்க: அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மீது ஆஸ்கர் விருது பெற்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டு

படத்தின் காப்புரிமை Reuters

உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடப்பட்டதை காட்டும் ரசிக்கத்தக்க புகைப்படங்கள்.

புகைப்படங்களைப் பார்க்க: உலகெங்கும் ஜொலித்த தீபாவளி (புகைப்படத் தொகுப்பு)

படத்தின் காப்புரிமை Getty Images

மாசடைந்த காற்றை ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மிக அதிக அளவில் உட்கிரகித்தாலும், சுவாசத்தை வெளிவிடும்போது அவை வெளியேறிவிடுவதில்லை. சுவாசிக்கும் காற்றில் உள்ள நச்சு நம் நுரையீரலில் படிந்துவிடும், இதன் பாதிப்பு வாழ்நாள் முழுவதும் தொடரும்.

செய்தியைப் படிக்க: 'தில்லிவாசிகள் ஒவ்வொருவரும் புகைப்பிடிப்பதாகச் சொல்லலாம். எப்படி?'

படத்தின் காப்புரிமை TWITTER

தமிழிசையின் கருத்துகள் சமூக வலைத் தளங்களிலும் பொது வெளியிலும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

செய்தியைப் படிக்க: தமிழிசைக்கு சவால்: மக்களிடம் கைதட்டல் வாங்க முடியுமா?

படத்தின் காப்புரிமை AFP

உச்ச நீதிமன்றம் பட்டாசு விற்பனைக்கு தடை விதித்திருந்தபோதும் தீபாவளி தினத்தன்று இரவு டெல்லியில் பரவலாக பட்டாசு வெடிக்கப்பட்டது. பாதுகாப்பான மாசுபாடு அளவு என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ள அளவைவிட 11 மடங்கு மாசுபாட்டை டெல்லியியுள்ள சில இடங்கள் பதிவு செய்தன.

செய்தியைப் படிக்க: தடையை மீறிய கொண்டாட்டங்கள்: நச்சுப்புகையின் நடுவே டெல்லி

படத்தின் காப்புரிமை Getty Images

உலகப் பொருளாதாரம் நல்ல முறையில் முன்னேற்றதை காணும் நேரத்தில், மோடியின் தலைமைக்குகீழ், இந்தியா, மந்தமடைந்துவரும் பொருளாதாரத்தையும், வேலையின்மையையும் சமாளிக்க போராடி வருகிறது.

செய்தியைப் படிக்க: சக்தி இழக்கிறதா `மோடி மந்திரம்`?

படத்தின் காப்புரிமை Reuters

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் முக்கியமான பாகிஸ்தான் தீவிரவாதத் தலைவர் ஒமர் காலித் கொராசனி உயிரிழந்தார்.

செய்தியைப் படிக்க: அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட பாக். தீவிரவாதி

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. கருணாநிதி திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு ட்ரென்டான கருணாநிதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :