அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் மீது ஆஸ்கர் விருது பெற்ற நடிகை பாலியல் குற்றச்சாட்டு

Lupita Nyong'o படத்தின் காப்புரிமை Reuters
Image caption லபிதா நோங்கோ

ஆஸ்கர் விருது பெற்ற நடிகையான லபிதா நோங்கோ, பிரபல அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு லபிதா அளித்த பேட்டியில், ஹார்வி தனக்கு தவறான தகவலை கூறி அவரது அறைக்கு வரவைத்ததாக தெரிவித்துள்ளார்.

பிறகு, ஹார்வியின் அறைக்கு சென்றவுடன் அவர் தனக்கு மசாஜ் செய்து விட வேண்டும் என்று கூறியபோது, அவர் விளையாட்டாக சொல்கிறார் என்று நினைத்ததாக கூறியுள்ளார்.

வைன்ஸ்டீன் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் தொல்லையளித்ததாக டஜன் கணக்கான பெண்களிடமிருந்து குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அவர் மற்றவரின் "ஒப்புதலில்லாமல் பாலியல் தொடர்பு" கொண்டிருந்ததை "உறுதியாக" மறுத்தார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty
Image caption ஹார்வி வைன்ஸ்டீன்

"12 இயர்ஸ் எ ஸ்லேவ்" (12 Years a Slave) என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்ற லபிதா, அப்போது மேடை நாடக மாணவியாக இருந்தார்.

"2011ல் முதல் முறையாக ஹார்வியை சந்தித்த சில காலத்திற்கு பிறகு, கனெக்டிகட் நகரில் உள்ள தனது வீட்டிற்கு திரைப்படம் பார்ப்பதற்காக அவர் என்னை அழைத்தார்."

பிறகு, திரையிடும் அறையை விட்டு வெளியேறி தன்னுடன் வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாக லபிதா கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :