ஓரிரு வரிகளில் உலக செய்திகள்

உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக முகாபே நியமனம்

படத்தின் காப்புரிமை AFP/Getty

தொற்று நோய்கள் அல்லாத இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்றவற்றை சமாளிப்பதற்கு உதவுவுவதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ணத் துதராக நியமித்திருக்கிறது.

பொது சுகாதார பராமரிப்புக்கு ஜிம்பாப்வே காட்டிவரும் அர்ப்பணிப்பை உலக சுகாதார நிறுவனத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் டெட்ரோஸ் அத்கானாம் கபிரியோனியுஸ் புகழ்ந்துள்ளார்.

ஆனால், 37 ஆண்டுகளாக ஜிம்பாப்வேயை ஆண்டு வருகின்ற முகாபேயின் சுகாதார சேவைகள், ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படாதது, மருந்துகள் விநியோகத்தில் பற்றாக்குறை போன்றவற்றால் சீர்குலைந்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஸ்பெயின் முக்கிய பகுதியாக கேட்டலோனியா தொடரும் - ஸ்பெயின் அரசர்

படத்தின் காப்புரிமை AFP

கேட்டலோனியா ஸ்பெயினின் ஒரு பகுதியாக உள்ளது உள்ளது என்றும், நாட்டின் முக்கிய பகுதியாக அது தொடரும் என்றும் ஸ்பெயின் அரசர் ஐந்தாம் ஃபெலீப்பே தெரிவித்திருக்கிறார்.

கேட்டலோனியா பிரிவினை பிரச்சனை பற்றி ஸ்பெயின் அரசர் கருத்து கூறுவது இது இரண்டாவது முறையாகும்.

கேட்டலோனிய பிராந்திய அரசு பிளவை உருவாக்குகிறது என்றும், ஜனநாயக அமைப்புகள் மூலம் இந்தப் பிரச்சனைக்கு ஸ்பெயின் தீர்வு காணும் என்றும் வட பகுதி நகரான ஒவியேடோவில் விருது வழங்கும் நிகழ்வு ஒன்றில் பேசுகையில் ஸ்பெயின் அரசர் தெரிவித்துள்ளார்.

பிரெக்ஸிட்: பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை மிகைப்படுத்தப்பட்டுள்ளது - டஸ்க்

படத்தின் காப்புரிமை AFP

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள மந்தநிலை பற்றிய தகவல்கள் மிகைப்படுத்தப்பட்டிருக்கலாம் என்று ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க் பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற ஒரு உச்சி மாநாட்டிற்கு பின்னர் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய ராஜ்ஜியத்தோடு வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடங்குவதில் இப்போது இருக்கும் முன்னேற்றம் போதுமானதாக இல்லை. ஆனால் முன்னேற்றமே இல்லை என்று கூறுவதற்கில்லை என்று அவர் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :