பிபிசி தமிழில் இன்று.. மாலை 6 மணி வரை
பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்று பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளார் ஓய்வு பெற்ற ஐபிஸ் உயரதிகாரியான விஜய்குமார்.
பட மூலாதாரம், facebook
மெர்சல் படத்தில் இருந்து பாஜக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை விமர்சித்து பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
செய்தியைப் படிக்க: மெர்சல் காட்சிகளை நீக்கக் கோரிக்கை: மீம்களின் கிண்டல் மழை
பட மூலாதாரம், AFP/Getty Images
மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜிங்பின் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்
சீன அரசியல் மிகவும் ரகசியமாகவும், வெளிப்படைத்தன்மையற்றும் இயங்கக்கூடியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கட்சி மாநாட்டில் ஒரே சொற்றொடரை தொடர்ந்து பலமுறை பயன்படுத்தினால் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பொருள்.
செய்தியைப் படிக்க: புதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங்
பட மூலாதாரம், Getty Images
(கோப்புப் படம்)
கோயில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால்தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பட மூலாதாரம், TWITTER/YOGI
உத்தர பிரதேச மாநில அரசு அயோத்தியில் சரயூ நதிக்கரையில் நூறு மீட்டர் உயரம் கொண்ட ராமரின் சிலையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
செய்தியைப் படிக்க: அயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்
பட மூலாதாரம், Getty Images
2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று "த லென்செட்" மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.
செய்தியைப் படிக்க: ஆறில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் மாசுபாடு
கஞ்சாவை மருந்தாக பயன்படுத்தும் பெரு நாடு
மேரிவானா என்ற போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்கு அனுமதிக்கும் சட்டம் பெரு நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (காணொளி)
பட மூலாதாரம், Getty Images
சுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான அத்தியாயங்களில் ஒன்றான இந்திய சீன போர் தொடங்கி 55 ஆண்டுகள் ஆவதையொட்டி பிபிசியின் சிறப்புக் கட்டுரை.
செய்தியைப் படிக்க: 1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா?
மனிதர்களுடன் பேசுவதற்கு முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள்
முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை நாய்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்களுடன் பேச நாய்கள் முகபாவங்களை பயன்படுத்துகின்றன. (காணொளி)
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்