பிபிசி தமிழில் இன்று..

பிபிசி தமிழில் இன்று வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை EPA

கேட்டலான் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் "சட்டத்திற்கு புறம்பானது மற்றும் மோதல் போக்குடன்" உள்ளதென்று கூறிய ரஜோய், கேட்டலோனியாவில் நேரடி ஆட்சியை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்று ஸ்பெயின் பிரதமர் கூறினார்.

செய்தியைப் படிக்க: கேட்டலோன் தலைவர்களை பதவி நீக்க ஸ்பெயின் முடிவு

Image caption ஜீனத் ஷெசாதி

ஜீனத் கடத்தப்படும் முன்பு, ஹமீது அன்சாரி எனும் இந்தியர் காணாமல் போனது தொடர்பான வழக்கு ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

செய்தியைப் படிக்க: கடத்தப்பட்ட 2 ஆண்டுக்குப் பின் பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் மீட்பு

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சமீபத்திய மாதங்களில் வட கொரியா ஏவுகணை சோதனைகளை அதிகரித்துள்ளது.

அணு ஆயுத ஏவுகணைகளால் அமெரிக்காவை தாக்கக்கூடிய திறனை அடைகின்ற நிலையில் வட கொரியா உள்ளது என்று அமெரிக்க உளவுத்துறையின் (சிஐஏ) தலைவர் மைக் பாம்பேயே தெரிவித்திருக்கிறார்.

செய்தியைப் படிக்க: அணு ஆயுதத் திறனை பெறக்கூடிய நிலையில் வட கொரியா உள்ளது - சிஐஏ தலைவர்

தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருக்கும் கருத்தொன்று சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

செய்தியைப் படிக்க: "டிரம்ப்பே வந்தாலும் பயமில்லை; நமக்கு மோடி இருக்காரு" தமிழக அமைச்சர் பேச்சு

சந்தனக் கடத்தல் வீரப்பனுக்குப் பின்புலமாக இருந்த அரசியல்வாதிகள் பற்றிய அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்று பிபிசி தமிழுக்கு பேட்டியளித்துள்ளார் ஓய்வு பெற்ற ஐபிஸ் உயரதிகாரியான விஜய்குமார்.

செய்தியைப் படிக்க: வீரப்பன் வேட்டை: அரசியல் குட்டையை கிளற விரும்பவில்லை என்கிறார் கே.விஜய்குமார்

படத்தின் காப்புரிமை facebook

மெர்சல் படத்தில் இருந்து பாஜக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்கவேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை விமர்சித்து பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செய்தியைப் படிக்க: மெர்சல் காட்சிகளை நீக்கக் கோரிக்கை: மீம்களின் கிண்டல் மழை

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption மாவோ போன்று தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்க ஷி ஜிங்பின் முயல்வதாக பலரும் கூறுகின்றனர்

சீன அரசியல் மிகவும் ரகசியமாகவும், வெளிப்படைத்தன்மையற்றும் இயங்கக்கூடியது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கட்சி மாநாட்டில் ஒரே சொற்றொடரை தொடர்ந்து பலமுறை பயன்படுத்தினால் ஏதோ பெரிதாக நடக்கப்போகிறது என்று பொருள்.

செய்தியைப் படிக்க: புதிய கொள்கையை உருவாக்கி அதிகாரத்தை குவிக்கும் ஷி ஜின்பிங்

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

கோயில் அர்ச்சகர்களாக இருப்பவர்களுக்கு மணப்பெண் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால்தான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டாலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் இந்த உதவித்தொகை குறித்த விமர்சனங்களும் எழுந்துள்ளன.

செய்தியைப் படிக்க: அர்ச்சகர்களை மணம்முடிக்க 3 லட்சம் உதவித்தொகை: தெலங்கானா அரசின் கல்யாணப் பரிசு

படத்தின் காப்புரிமை TWITTER/YOGI

உத்தர பிரதேச மாநில அரசு அயோத்தியில் சரயூ நதிக்கரையில் நூறு மீட்டர் உயரம் கொண்ட ராமரின் சிலையை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

செய்தியைப் படிக்க: அயோத்யா: பிரம்மாண்ட ராமர் வேண்டாம், ஆலயமே போதும்

படத்தின் காப்புரிமை Getty Images

2015 ஆம் ஆண்டு உலக அளவில் நிகழ்நத இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்தோடு தொடர்படையதாக மாசுபாடு இருந்துள்ளது என்று "த லென்செட்" மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளது.

செய்தியைப் படிக்க: ஆறில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் மாசுபாடு

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கஞ்சாவை மருந்தாக பயன்படுத்தும் பெரு நாடு

மேரிவானா என்ற போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்கு அனுமதிக்கும் சட்டம் பெரு நாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (காணொளி)

படத்தின் காப்புரிமை Getty Images

சுதந்திர இந்தியாவின் மிகவும் மோசமான அத்தியாயங்களில் ஒன்றான இந்திய சீன போர் தொடங்கி 55 ஆண்டுகள் ஆவதையொட்டி பிபிசியின் சிறப்புக் கட்டுரை.

செய்தியைப் படிக்க: 1962 இந்திய-சீன போர்: நம்பிக்கை துரோகமா? கோழைத்தனமா?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மனிதர்களுடன் பேசுவதற்கு முகபாவங்களை பயன்படுத்தும் நாய்கள்

முகபாவங்களின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தும் திறன்களை நாய்கள் கொண்டிருக்கின்றன. மனிதர்களுடன் பேச நாய்கள் முகபாவங்களை பயன்படுத்துகின்றன. (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :