பிபிசி தமிழில். . . 1 மணி வரை இன்று. . .

  • 22 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 1 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

என்னிடம் 9 எம்.எம் பிரவுனிங் தானியங்கி கைத்துப்பாக்கி ஒன்று இருந்தது. எனது சடலத்தை இந்திய வீரர்கள் கண்டெடுக்கும்போது, அந்த துப்பாக்கியில் ஒரு தோட்டாக் கூட இருக்கக்கூடாது என்று முடிவு செய்துக்கொண்டேன்.

செய்தியை படிக்க: 1962 இந்திய-சீன போர்: எனது தோட்டா சீன சிப்பாயின் கண்ணை உரசிச் சென்றது

படத்தின் காப்புரிமை Ronald Grant

ஹார்வி, இர்மா மற்றும் மரியா சூறாவளிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடத்தப்பட்ட `தி ஒன் அமெரிக்கன் அப்பீல்` என்ற இந்த நிகழ்ச்சி, இதுவரை, 31 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது.

செய்தியை படிக்க: ஐந்து முன்னாள் அமெரிக்க அதிபர்கள் ஒரே மேடையில்!

படத்தின் காப்புரிமை ALEKSEY SUHANOVSKY

ரஷ்யப் புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.ஆனால் அவர்கள் போல்ஷ்விக்குகளுடன் (ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்கள் போல்ஷ்விக்குகள் என அழைக்கப்பட்டனர்) சண்டையிடும், அவர்களை சிறையிலடைக்கும் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த வகையில் ரஷ்ய மண்ணில் அவர்கள் முதல் சித்திரவதை முகாமை தொடங்கினர். அந்த இடம்தான் `மரணத் தீவு` என அழைக்கப்படுகிறது.

செய்தியை படிக்க: `மரணத்தீவு`: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம்

படத்தின் காப்புரிமை BBC THREE

பிரிட்டனில் 4 லட்சம் மக்கள் வகை 1 நீரிழிவு நோயுடன் ( type 1 diabetes) வாழ்ந்து வருகின்றனர். இதேவேளையில், வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள 60% பெண்கள் 25 வயதில் உணவு முறை குறைபாடை சந்திப்பதாக கனாடவின் ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.

செய்தியை படிக்க: டையபுலிமியா - உலகின் மிகவும் அபாயகரமான நோய்

படத்தின் காப்புரிமை Getty Images

தேசிய காப்பகம், இந்த கொலை தொடர்பான பெரும்பாலான கோப்புகளை ஏற்கனெவே வெளியிட்டுவிட்ட நிலையில், கடைசிகட்ட கோப்புகள் மட்டும், இன்னும் பூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

செய்தியை படிக்க: கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா?

பிபிசியின் பிரபலமான, விருது பெற்ற ''100 பெண்கள்'' தொடரின் இந்த ஆண்டு பட்டியலில் இந்திய பெண்கள் பத்து பேர் இடம்பெற்றுள்ளனர்.

செய்தியை படிக்க: ''100 பெண்கள்'' பட்டியலில் இடம்பெற்ற பத்து இந்தியப் பெண்கள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்