முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

பொது வெளியில் நிர்வாணத்தைத் தடை செய்த ஓர் நாட்டில், ஒரு நிர்வாண விரும்பியின் வாழ்க்கை எப்படி இருக்கும்? இந்தோனீசிய நாட்டில் உள்ள நிர்வாண சங்கத்தின் சில உறுப்பினர்களை பிபிசி இந்தோனீசிய சேவையை சேர்ந்த க்ளாரா ரோண்டான் சந்தித்தார்.

ஆதித்யாவின் உடலில் துணி என்ன... ஒரு நூல் கூட இல்லை.

அவர் என்னிடம் பேசும்போது, நண்டு, முட்டை, சீன முட்டைக்கோஸ் ஆகியற்றை வாணலில் வதக்கினார். அந்தப் பெரிய வாணலில் இருந்து சூடான எண்ணெய் துளிகள் அவரது வெறும் வயிற்றுப் பகுதியில் தெறித்தது.

"எனக்கான உணவைச் சமைப்பது உள்ளிட்ட தினசரி வேலைகளைச் செல்வதில் எனக்கு விருப்பம். நான் விரும்பும் நேரத்தில் நிர்வாணமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். அடைகள் அணியாமல் வசதியாக இருப்பதுடன், இன்பமாகவும் உணருகிறேன்"

ஆதித்தியா ஆபத்தை எதிர்கொண்டு நிர்வாணத்தை கடைப்பிடிப்பதால், தனது முழுப் பெயர் வெளிவர வேண்டாம் என நினைக்கிறார். ஆபாசப் பட எதிர்ப்பு சட்டம் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனீசியாவில், பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது சட்டவிரோதமானது.

இன்னும் இவர் தனிப்பட்ட முறையில், நான்கு நிர்வாண விரும்பிகளுடன் சந்திக்கிறார். "நாங்கள் பொதுவெளியில் நிர்வாணமாகக் காணப்பட்டால், சிறையில் அடைக்கப்படலாம். இதன் காரணமாகவே நாங்கள் தனிப்பட்ட முறையில் சந்திக்கிறோம்" என்கிறார்.

ஒரு நெருக்கமான பிணைப்பு குழு

ஆதித்தியா, கடந்த 2007 முதல் தனது ஓய்வு நேரத்தின் போது நிர்வாணமாக இருக்கிறார்.

"இணையத்தில் உலாவினேன். நிர்வாணம் பற்றிய கட்டுரைகளைத் தேடி படித்தேன். அதனுள் மூழ்கினேன். நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கை பாதை இதுதான் என தோன்றியது"என்கிறார் அவர்.

நாட்டில் உள்ள மற்ற நிர்வாண விரும்பிகளுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவர்கள் சிறுகுழுவாக இருந்தாலும், உறுதியான மற்றும் நெருக்கமாக அமைக்கப்பட்ட குழுவாக உள்ளனர். ஜகார்த்தா நிர்வாண குழுவின் ஆண்கள் பெண்கள் என கிட்டதட்ட 10-15 உறுப்பினர்கள் உள்ளனர்.

நிர்வாணம் அவர்களுக்கு வலுவான இணைப்பு மற்றும் நீடித்த பிணைப்பை தருவதாக ஆதித்தியா நினைக்கிறார்.

"நாங்கள் நாங்களாகவே இருக்க முடியும். எவ்வளவு குண்டாக இருந்தாலோ, தளர்வான ஆணுறுப்பு இருந்தாலோ, வயிற்றில் பிரசவ குறி இருந்தாலோ, மார்பக அளவுக்காகவோ நீங்கள் அசிங்கப்படமாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் நிர்வாணமாக இருக்கிறீர்கள்"

படத்தின் காப்புரிமை Getty Images

அவரது வாழ்க்கையை முறையை ஏற்றுக்கொள்ளும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள நிர்வாண குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவரது கனவு.

பொது நிர்வாணத்திற்கு இந்தோனீசிய சட்டத்தில் அனுமதி இல்லை என்றாலும், நிர்வாணமாக செல்வதற்கான வாய்ப்புகளே இல்லை என அர்த்தம் இல்லை.

விடுமுறை விடுதிகளை வாடகைக்கு எடுத்து, இக்குழுவினர் அவ்வப்போது சந்திக்கின்றனர்.

நாங்கள் சந்தித்த "ஒரு நொடிக்குள் ஆடைகளைக் களைந்துவிடுவோம்" என கூறுகிறார். அவர்கள் ஒன்றாக பொழுதைக் கழிக்கிறார்கள். அரசியல் முதல் வேலை வரை என அங்கு உரையாடல் நிகழ்கிறது.

பொறுப்பற்ற தன்மை?

ஆபத்துகளுக்கு மத்தியிலும், ஆதித்தியா தனது வாழ்க்கை பற்றி நிர்வாண இணையதளங்களில் வெளிப்படையாகப் பதிவிட்டு வருகிறார்.

அவரது பல இன்ஸ்டாகிராம் கணக்குகளுக்கு மத்தியில், நிர்வாண படங்களை பதிவிடுவதற்கான தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கும் வைத்திருந்தார். முழு நிர்வாணமாக தேவாலயத்திற்குள் அவர் நிற்கும் ஒரு படமும் அதில் இருந்தது.

இந்தோனீசியாவின் ஆபாசப் படம் எதிர்ப்பு சட்டத்தின் கீழ் அவர் குற்றவாளி ஆக்கப்படலாம் என்பதால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நீக்கியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

"இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம், நான் கொஞ்சம்கூடப் பொறுப்பில்லாமல் இருக்கிறேன் என சக நிர்வாண விரும்பிகள் கூறினர்" என்கிறார்.

தனது வாழ்க்கை பற்றி பல தவறான கண்ணோட்டங்களை மாற்ற, இந்தப் பதிவுகள் அவசியமானது என அவர் நினைக்கிறார்.

"இந்தோனேசியாவில் நிர்வாணமாகம் என்பது பாலுறவோடு தொடர்புடையது என்று நினைக்கிறார்கள். நாங்கள் ஒன்றாக ஆடை அவிழ்த்தால் அது செக்ஸ் பார்ட்டி என்று நினைக்கிறார்கள். உண்மையில் இதில் பாலுறவு தொடர்பான ஏதுமில்லை," என்கிறார் அவர்.

கடினமான வாழ்க்கை

இந்தோனீசியாவில் நிர்வாண விரும்பியாக இருப்பது "கடினமான வாழ்க்கை முடிவு" என போர்னியோவில் வாழும் மற்றோரு பெயர் கூற விரும்பாத நிர்வாண விருப்பி ஒப்புக்கொள்கிறார்.

பாலி தீவு நிர்வாண விரும்பிகளின் சிறந்த தேர்வாக உள்ளது. முஸ்லிம் பெரும்பான்மை இந்தோனீசியாவின் மற்ற பகுதிகளை விட இங்குக் கண்டிப்புகள் குறைவாக உள்ளது. இங்கு ஏற்கனவே உள்ள நிர்வாண விரும்பிகளை ஏற்கும் விடுதிகள் வெளிநாட்டினருக்கு மட்டுமே அனுமதியளிக்கின்றன" என்கிறார்.

40 வருடங்களுக்கு முன்பு பாலி தீவில் நிர்வாணம் என்பது சாதாரண ஒன்று. மேலாடை இல்லாமல் பெண்கள் செல்வதையும், நிர்வாணமாகக் குளிப்பதையும் பார்க்க முடியும்.

படத்தின் காப்புரிமை Reuters

பாலி தீவில் உள்ள சுற்றுலா பகுதியான செமின்யாக்கில் மட்டும் நிர்வாண விரும்பிகளுக்கு 10 விடுதிகள் இருப்பதாகப் பாலி தீவில் உள்ள ஒரு விடுதியின் மேலாளர் கூறுகிறார். "அடை கட்டாயமல்ல" என இவர் நடத்தும் இரண்டு விடுதிகள் விளம்பரம் அளிக்கின்றன.

"உயர் வர்க்க மக்களுக்கு நிர்வாணம் வழக்கமானது" என்கிறார்.

நிர்வாண விருந்தினர்களில் வெளிநாட்டினருக்கு மட்டுமே தங்கள் விடுதியில் அனுமதிக்கப்படுவதாகவும், வேறு விடுதிகள் இந்தோனீசிய நிர்வாண விரும்பிகளை ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் பிபிசியிடம் கூறினார்.

தவறாக எண்ணம்

அவரும் அவரது சக நிர்வாண விரும்பிகளும், மற்றவர்களைப் போலவே மனிதர்களே எனச் சமூகத்திற்கு கற்பிக்க விரும்புவதாகக் கூறுகிறார் ஆதித்தியா.

"நான் செய்வது ஆபாசம் அல்ல" என்கிறார்.

"என்னை ஒழுக்கமற்றவனாக மதிப்பிடும் போது நான் வருத்தப்படுவேன். சிலர் எங்களை மிருகங்கள் என அழைக்கின்றனர். நான் நானாக இருக்கிறேன். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை" என்கிறார் ஆதித்தியா.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :