பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு எதிராக தொடர் தாக்குதல்!

  • 22 அக்டோபர் 2017
பாகிஸ்தானில் திருநங்கைகளுக்கு படத்தின் காப்புரிமை Getty Images

பாகிஸ்தானின் வடமேற்கு நகரான பெஷாவர் அருகில், தலை துண்டிக்கப்பட்ட திருநங்கையின் உடலை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

பகுதியளவு அழுகிய இந்த உடல், அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்டது. ஆனால், கைரேகைகள் மற்றும் டிஎன்ஏ மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

திருநங்கைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக பாகிஸ்தான் சட்டப்பூர்வமன அங்கிகரித்துள்ளது. ஆனால், அவர்கள் பாகுபாடு மற்றும் வன்முறையை எதிர்கொள்வதாக மனித உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்