பிபிசி தமிழில். . . 1 மணி வரை . . .

பிபிசி தமிழில் இன்று 1 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Wales News Service

பத்திரிகையாளர் டஃப்னே கருனானா கலீட்சியாவின் மரணத்திற்கு நீதி கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மால்டாவில் பேரணியில் ஈடுபட்டனர். கடந்த திங்கட்கிழமை, டஃப்னே கார்குண்டு மூலம் கொல்லப்பட்டார். ஊழலில் ஈடுபட்டதாக பல முக்கிய அரசியல்வாதிகள் மீது இவர் குற்றம்சாட்டி தனது வலைப்பக்கத்தில் எழுதினார்.

செய்தியை படிக்க: மால்டா பத்திரிக்கையாளர் கொலைக்கு நீதிகேட்டு ஆயிரக்கணக்கானோர் பேரணி.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மார்பகப் புற்றுநோயின் 12 அறிகுறிகள்

உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி.

ஆதித்தியா ஆபத்தை எதிர்கொண்டு நிர்வாணத்தை கடைப்பிடிப்பதால், தனது முழுப் பெயர் வெளிவர வேண்டாம் என நினைக்கிறார். ஆபாசப் பட எதிர்ப்பு சட்டம் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட இந்தோனீசியாவில், பொது வெளியில் நிர்வாணமாக இருப்பது சட்டவிரோதமானது.

செய்தியை படிக்க: இந்தோனீசியாவின் ரகசிய நிர்வாண சமூகம்

படத்தின் காப்புரிமை Reuters

ஜப்பான் தேர்தலில், வெற்றி தெளிவாக உள்ள நிலையில், வடகொரியாவுடனான விவகாரத்தை `உறுதியாக கையாளுவேன்` என பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் வெற்றிபெறுவதன் மூலம், அடுத்த ஆண்டு, தனது கட்சியான எல்.டி.பி கட்சியின் தலைவராக தொடர அபேவிற்கு வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, ஜப்பானில் அதிககாலம் பணியில் இருந்த பிரதமர் என்ற பெயரையும் அவர் பெறலாம்.

செய்தியை படிக்க: வடகொரியாவை சமாளிக்க உறுதியான ராஜதந்திரம் தேவை: அபே

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
மெர்சல்: என்ன சொல்கிறார்கள் இளைஞர்கள்?

`மெர்சல்` திரைப்படத்தில் ஜி.எஸ்.டி வரி குறித்தும், டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்தும் இடம்பெற்றுள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என பாஜகவினர் கூறியுள்ள நிலையில், இது குறித்து தமிழக இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள்?

போர்க்களத்தில் உண்மையாக நடைபெறும் செய்திகளை தெரிந்துக் கொள்ள இந்திய ராணுவத்தின் சிப்பாய் முதல் ஜெனரல்வரை, பெய்ஜிங் வானொலியை பயன்படுத்தியது நகைமுரண்!

செய்தியை படிக்க: 1962 போர்: சீன ஆக்ரமிப்பு அச்சத்தால் எரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்

படத்தின் காப்புரிமை HENRY ALDRIDGE & SON

ஹோல்வர்சன் எழுதியதில் மெய்யாகாமல் போன போன ஒரே விஷயம், "அனைத்தும் நல்லமுறையில் நடந்தால், நாங்கள் புதன்கிழமை காலை, நியூயார்க் நகரை அடைவோம்" , என்பதுதான்.

செய்தியை படிக்க: 1,26,000 பவுண்டு ஏலம் போன ஒரு டைட்டானிக் பயணியின் கடிதம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :