கழிவிலிருந்து காசு: பாகிஸ்தானின் 10 வயது சூழல் போராளி

ஜைமல்
Image caption பாகிஸ்தானில் கழிவுப்பொருள் பிரச்சனை மிகவும் முக்கியமானதாக உள்ளது

"மக்கள் தங்கள் குப்பைகளை குவிப்பதற்கு முன் ஒரு கணம் சிந்தித்திருந்தால், நமது சூழலை பாதிக்கும் அதைச் செய்திருக்க மாட்டார்கள்"

பாகிஸ்தானின் பஞ்சாபில் தனது சொந்த ஊரான சர்கோதாவின் புறநகர்ப் பகுதியில் தற்காலிக குப்பைத் தொட்டியைப் பார்த்த 10 வயது ஜைமல் உமெர் பெருமூச்சுவிட்டார்.

ஆனால், நாட்டில் பலராலும் "இளம் சமூகத்-தொழில்முனைவோர்" என்றழைக்கப்படும் அவரிடம் இதற்கான தீர்வு இருக்கிறதா?

இப்போது, பெருமளவிலான பிளாஸ்டிக் பைகள், உலோகம் மற்றும் பொதுக்கழிவுகள் என கழிவுகளின் வண்ணமயமான குவியலே பொதுவாகக் காணக்கிடைக்கிறது.

தீயிடக்கூடாது என்று தடை செய்யப்பட்ட பொருட்களும், கழிவாக மாறும்போது தீயிலிடப்படுவதால் காற்றில் நச்சும், துர்நாற்றமும் கலந்துவிடுகிறது.

ஜைமல் உமெரின் முன் இருப்பது பாகிஸ்தானின் கழிவு பிரச்சனையின் ஒரு சிறு துளிதான்.

நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறையின் தகவல்களின்படி, ஆண்டொன்றுக்கு 20 மில்லியன் திடக்கழிவுகள் உருவாகிறது; இது ஆண்டுதோறும் 2.4 சதவிகிதம் அதிகரிக்கிறது.

Image caption சம்பாதிக்கும் பணத்தை பிற குழந்தைகளுக்கு உதவ ஜைமல் பயன்படுத்தினார்.

குப்பைக்கிடங்கு பிரச்சனைகள்

"இது பாகிஸ்தான் முழுவதிலும் காணக்கூடிய நிலைமை. இந்தப் பைகள் மக்கும் தன்மை கொண்டவை அல்ல, அக்கறையின்றி மக்கள் அவற்றைத் தூக்கி எறிகிறார்கள்.

மறுசுழற்சி பற்றி அவர்கள் உண்மையில் சிந்திக்கவில்லை" என்று ஜைமல் கூறுகிறார்.

நாட்டில் முறையான திடக்கழிவு மேலாண்மை எப்போதுமே நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை; குப்பைகளில் பாதியை அரசாங்கம் சேகரிக்கிறது. குப்பைகளை போடுவதற்கான குப்பைக் கிடங்குகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகிறது.

குப்பைகளை குவிப்பது மற்றும் எரிப்பது ஆகியவையே பொதுவான கழிவு மேலாண்மை முறையாக இருக்கிறது. மேலும் சேகரிக்கப்படாத பெருமளவிலான கழிவுப்பொருட்கள் பொது சுகாதாரத்திற்கு தீவிரமான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அழகான பைகள்

ஜீ-பேக்ஸ் (Zeebags) என்பது ஜைமலின் மாசுபாட்டை குறைக்கும் முயற்சி; இது, சுற்றுச்சூழலைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும்.

பழைய செய்தித்தாள்களை வண்ணங்களை சேர்த்து, அழகான பரிசுப்பைகளாக அலங்கரிக்கும் இந்த பள்ளி மாணவி, அவற்றை குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் விற்பனை செய்கிறார். இதில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் பெரும்பகுதியை பல்வேறு உள்ளூர் அறக்கட்டளைக்கு பகிர்ந்தளிக்கிறார்.

Image caption தனது வணிகம் பெரிய அளவில் வளர்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஜைமல் நம்புகிறார்.

ஒரு சில பைகளில் விற்பனையைத் தொடங்கிய மூன்று வருட காலத்தில் அவர் $ 4-5000 மதிப்புள்ள நூற்றுக்கணக்கான பொருட்களை விற்பனை செய்துவிட்டார்.

"யூடியூப்" (YouTube)ஐ பார்த்து பைகள் செய்ய கற்றுக்கொண்டேன்.

"என்னுடைய பள்ளிப்பாடங்களுடன், ஜீபேகுகளையும் செய்வது கடினம், எனவே, வார இறுதியில், அல்லது விடுமுறை நாட்களில் என் உறவினர்களுடன் அவற்றைச் செய்வேன்.

"அப்பாவும், தாத்தாவும் பைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களுக்கு பணம் கொடுக்கிறார்கள், அவர்களின் உதவி இல்லாவிட்டால், என் திட்டத்தை செயல்படுத்துவது சிரமமாக இருக்கும்," என்கிறார் அவர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 வயது சிறுமி பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை சரிசெய்வாரா?

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் `எஸ்.ஒ.எஸ் சில்ட்ரன்ஸ் வில்லேஜஸ்` அறக்கட்டளைக்கு ஜைமலின் பணம் செல்கிறது.

"எனது வருமானத்தில் தண்ணீர் குளிர்விப்பான்கள், சலவை இயந்திரங்கள், பேட்டரிகள் மற்றும் இதுபோன்ற அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கிக் கொடுக்க முடியும்" என்று ஜைமல் கூறுகிறார்.

"அவர்களுடைய முகங்களில் தெரியும் மகிழ்ச்சி, எனக்கு திருப்தி அளிப்பதோடு, பணிபுரிய மேலும் தூண்டுதலை கொடுக்கிறது."

அவரது புதுமையான தொண்டு நிறுவனம், தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களின் கவனத்தைப் ஈர்த்துள்ளது. மேலும், ஜைமலை, "பாகிஸ்தானின் மிகச்சிறந்த சமூக தொழில் முனைவோர்" என்றும் அவை அழைக்கின்றன.

விருது வென்றவர்

பாகிஸ்தான், செளதி அரேபியா மற்றும் அமெரிக்காவில் பல விருதுகளை வென்றுள்ளது ஜீபேக்ஸ்.

Image caption பழைய செய்தித்தாள்களை பரிசுப் பைகளாக மாற்றுகிறார் ஜைமல்

"என் வேலைக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருப்பது உற்சாகத்தை அளிக்கிறது. என் நாட்டிற்கும் பெற்றோர்களுக்கும் சில நேர்மறையான வெளிப்பாட்டைப் பெற்றுக் கொடுத்ததற்காக பெருமிதம் அடைந்தேன்."

ஆன்லைன் விற்பனை, அவரது வர்த்தகத்திற்கு புதிய சாத்தியக்கூறுகளை திறந்துவிட்டுள்ளது.

"பாகிஸ்தானில் பெண்கள் சுயமாக வேலை செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், ஆனால் எனக்கு எந்த விதமான கஷ்டமும் ஏற்படவில்லை. வேலையைத் தொடரவேண்டும் என்பதே எனது லட்சியம்"

"எதிர்காலத்தில் ஒரு தொழிலதிபராக வேண்டும், என் வலைத்தளத்தில் ஜீபேக்ஸை விரிவாக்க வேண்டும் என்பதோடு, மற்றவர்களின் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்த விரும்புகிறேன்"

"எனது திட்டத்தை பாகிஸ்தானில் மட்டுமல்ல உலகளாவிலும் மேம்படுத்தவேண்டும் என்பதே எனது மிகப்பெரிய லட்சியம்."

'இன்வெஸ்ட்2இன்னொவேட்' (Invest2Innovate)இன் நிறுவனர் கல்சூம் லக்கானி, பாகிஸ்தானில் நிறுவனங்கள் தொடங்குவதற்கும், அவை முன்னேறுவதற்கும் உதவுகிறார்.

நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

Image caption பள்ளியில் ஜைமல்

மகத்தான ஆற்றலை கொண்டிருக்கும் நாம் எப்போதும் சிந்திக்க வேண்டியது: 'அந்த ஆற்றலை எவ்வாறு செயல்படுத்துவது?' மற்றும் 'இளைஞர்கள் வியாபாரத்தைத் தொடங்குவதற்கு அனுமதிப்பதோடு, அவர்களின் தொழில்களை வளர்ப்பதற்கும் எவ்வாறு அனுமதிக்கிறோம்?'

சுற்றுச்சூழல் பிரச்சினைகளை கையாளும் வகையில் பாகிஸ்தான் ஏற்கெனவே, சட்டரீதியாக செயல்படுவதோடு, அரசு முகமைகளை உருவாக்குவது மற்றும் சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து தொழில்நுட்ப உதவிகளை ஏற்றுக் கொள்ளவும் தொடங்கிவிட்டது.

ஆனால் இதற்கான எதிர்விளைவுகள் இன்னமும் சரியாக கிடைக்கவில்லை. பாதுகாப்பு மற்றும் அரசியல் பிரச்சனைகளின் அழுத்த்த்தில் சிக்கிக் கொண்டிருக்கும் நாட்டில், இதற்கு உயர் முன்னுரிமை கிடைக்கவில்லை.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பாமாயில் விவசாயம்; பாழாகும் காடுகள்; சீர்கெடும் சுற்றுச்சூழல்

இது, ஜைமலின் வேலைக்கு இன்னும் அதிக முக்கியத்துவத்தை கொடுக்கிறது.

தன்னுடைய வெற்றி, சுற்றுச்சூழலை கவனித்துக்கொள்வதைப் பற்றிய மக்களின் கண்ணோட்டத்தை மாற்றத் தொடங்கும் என அவர் நம்புகிறார்.

"எதிர்கால தலைமுறையினர் சுத்தமான மற்றும் பாதுகாப்பான உலகில் வாழவேண்டியது அவசியம்.

"எனது பங்களிப்பை செய்துவிட்டேன் என்று சொல்ல விரும்புகிறேன், ஆனால் மற்றவர்களும் எதாவது செய்ய வேண்டும் என்று அவர்களே நினைக்கவேண்டும்."

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :