பிபிசி தமிழில். . இரவு 10 மணி வரை

  • 23 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இன்று இரவு 10 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AFP

இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசில் நாட்டில் தொடரப்பட்டுள்ள போர்குற்ற வழக்கு, இலங்கையின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கலாம் என ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

செய்தியை படிக்க:இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜயசூரியவுக்கு எதிரான வழக்கை குறிப்பிட்டு ஐ.நா எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Getty Images

ராணுவ வீரரான தனது கணவர், பணியின்போது நைஜரில் இறந்தபிறகு, தனக்கு இரங்கல் தெரிவிக்க தொலைபேசியில் அழைத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு கணவரின் பெயர்கூட நினைவில் இல்லை என்று அமெரிக்க சிப்பாயின் மனைவி கோபத்துடன் கூறியுள்ளார்

செய்தியை படிக்க:டிரம்பை விமர்சிக்கும் இறந்துபோன அமெரிக்க சிப்பாயின் மனைவி

படத்தின் காப்புரிமை Getty Images

இலங்கை அணி இந்திய மண்ணில் அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இன்று பிசிசிஐ அறிவித்தது.

செய்தியை படிக்க:இலங்கை தொடர்: இந்திய அணியில் மீண்டும் முரளி விஜய், அஸ்வின்

படத்தின் காப்புரிமை JAFFAR

திருநெல்வேலியில் திங்களன்று கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக்கோரி தீக்குளித்த குடும்பத்தினரில், தந்தை எசக்கிமுத்துவை தவிர அவரது இளைய மகள் மற்றும் மனைவி சுப்புலட்சுமி ஆகியோர் இறந்துவிட்டனர்.

செய்தியை படிக்க:கந்துவட்டி பிரச்சனையால் தீக்குளித்த குடும்பத்தில் தாய், குழந்தை பலி

படத்தின் காப்புரிமை Getty Images

வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் தமது நாட்டு தொழிலாளர்கள் குறித்து அரசாங்கம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

செய்தியை படிக்க:சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு அரசு பொறுப்பேற்காது: இலங்கை அரசு