பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை ...

  • 24 அக்டோபர் 2017

பிபிசி தமிழில் இன்று மாலை 6 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான மெர்சல் திரைப்படத்தை பாரதீய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் எச். ராஜா இணையத்தில் பார்த்ததாக ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் கூறியிருந்தார். சமீபத்தில்தான் வெளியான திரைப்படத்தை இணையத்தில் பார்த்தாக எச். ராஜா கூறியது குறித்து விஷால் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

செய்தியை படிக்க: நடிகர் விஷால் அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை ஏன்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிரிக்கெட்

மகளிர் கிரிக்கெட் உலகப் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதையடுத்து, பல பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்களது கிரிக்கெட் ஆர்வம் குறித்து பேச முன்வந்துள்ளனர். (காணொளி)

படத்தின் காப்புரிமை Getty Images

26 ஆண்டுகள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்த பேரறிவாளன், இரண்டு மாதம் சிறை விடுப்பு முடிந்து மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.

செய்தியை படிக்க: சிறைக்குத் திரும்பினார் பேரறிவாளன்

படத்தின் காப்புரிமை Reuters

இதுவரை 340 மில்லியன் டாலர்கள் சேர்ந்துள்ள நிலையில், 434மில்லியன் டாலர்கள் பணம் சேர்ந்தால், பத்து லட்சத்திற்கு அதிகமான மக்களுக்கு ஆறு மாதங்கள் வரை உதவ முடியும் என்கிறது ஐ.நா அமைப்பு.

செய்தியை படிக்க: ரோஹிஞ்சாக்கள் நெருக்கடி: ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் வங்கதேசம்

படத்தின் காப்புரிமை Reuters

ஜின்பிங்கை நோக்கிய எந்த சவாலாக இருந்தாலும், அது சீனாவில் கமியூனிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு எதிரான அச்சுறுத்தலாகவே பார்க்கப்படும்.

செய்தியை படிக்க: `மாவோவிற்கு பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவர்`, ஷி ஜின்பிங்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
10 வயது சிறுமி பாகிஸ்தானின் கழிவுப் பிரச்சனையை சரிசெய்வாரா?

பழைய செய்தித்தாளில் இருந்து 'ஜீ-பேக்ஸ்' எனும் மறுசுழற்சி பைகளை தயாரித்து, பாகிஸ்தானின் கழிவு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறார் ஜைமல் உமெர் எனும் 10 வயது சிறுமி. (காணொளி)

செய்தியை படிக்க: கழிவிலிருந்து காசு: பாகிஸ்தானின் 10 வயது சூழல் போராளி

Image caption தனது கணவர் இப்ராஹிம் இல்லாமல் வாழ போராடிக்கொண்டிருக்கிறார் லைலா.

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சனை, தொடர்ந்து தீராத பிரச்சனையாக நீடித்துக் கொண்டிருக்க, இந்திய - பாகிஸ்தான் மீனவர் பிரச்சனையும் அதேபோல் தொடர்கிறது. இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரம் மற்ற நாட்டுச் சிறைகளில் வாடிக் கொண்டிருப்பதாக அவர்களது குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

செய்தியை படிக்க: இந்தியா, பாகிஸ்தானின் 'அரை விதவைகள்'

படத்தின் காப்புரிமை Thinkstock

புதிய வரலாற்றின்படி, மைசூரில் எட்டாயிரம் ஆலயங்களை இடித்துத் தள்ளினார் திப்பு. ஆனால், தனது அரண்மனைக்கு அருகில் இருந்த ரங்கநாத சுவாமி கோவிலை மட்டும் இடிக்க மறந்துவிட்டது ஏன் என்று தெரியவில்லை.

செய்தியை படிக்க: திப்புசுல்தான் இந்துக்களின் கதாநாயகனா, வில்லனா?

படத்தின் காப்புரிமை MARGARET BOURKE-WHITE/THE LIFE PICTURE COLLECTION
Image caption 1947ஆம் ஆண்டு புகைப்படம், டிரக்குகள் மற்றும் ஆயுதங்களுக்காக காத்திருக்கும் பழங்குடியின போராளிகள்

70 ஆண்டுகளுக்கு முன்னர், பதான் பழங்குடியினர் கோடாலிகளையும், வாள்களையும் வைத்துக்கொண்டு காஷ்மீருக்குள் நுழைந்தார்கள். உலகின் மிக நீண்டகால எல்லை பிரச்சினைக்கான விதை அப்போதுதான் விதைக்கப்பட்டது.

செய்தியை படிக்க: காஷ்மீர் ராஜாவின் ராணுவத்தின் மீது படையெடுத்த பழங்குடி போராளிகள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நீங்கள் பார்த்திராத பெனால்டி முறையில் வியத்தகு கோல்

பாங்காக் விளையாட்டு கிளப் மிகவும் வியத்தகு முறையில் பெனால்டி கோல் அடித்த காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :