கிம் ஜாங்-நாம் கொலை: மலேசிய விமான நிலையத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெள்ளை ஆடையில் உள்ள பெண் ஆண் ஒருவரின் முகத்தில் ஏதோ பூசுவதை காணலாம்.

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்று விட்ட சகோதரர் கிம் ஜாங்-நாமை கொலை செய்யதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டு பெண்களும் மலேசியாவில் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தோனீஷியாவை சேர்ந்த சிட்டி அய்ஷ்யா, வியட்நாமை சேர்ந்த டோன் தி ஹீயோங் இருவரும் செவ்வாய்கிழமை கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

கிம் ஜாங்-நாம் தன்னுடைய விமானத்திற்காக காத்திருந்த வேளையில், அதிக விஷத்தன்மையுடைய விஎக்ஸ் நரம்பு ரசாயனத்தை அவருடைய முகத்தில் பூசியதாக இவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி குறும்பு நிகழ்ச்சி என்று அவர்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக கூறி, தாங்கள் குற்றமற்றவர்கள் என்று இந்த பெண்கள் முறையிட்டுள்ளனர். அவர்கள் வட கொரிய முகவர்களால் ஏமாற்றப்பட்டிருந்தனர்.

பிப்ரவரி 13 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தக் கொலையில், தங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று வட கொரியா கூறியுள்ளது. ஆனால் இந்த கொலை நடத்த அன்று மலேசியாவில் இருந்து வெளியேறிவிட்ட வட கொரியர்கள் 4 பேர் இந்த கொலையோடு தொடர்புடையவர்களாக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை, இந்த இரு பெண்களும் கொண்டுவரப்பட இருந்ததால், கோலாலம்பூர் விமானநிலையம் பத்திரிகையாளர்களால் நிறைந்திருந்தது.

படத்தின் காப்புரிமை EPA

விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், குண்டு துளைக்காத உடைகளை அவர்கள் அணிந்தனர்.

அந்த விமான நிலையத்தை சுற்றி வருகையில் டோன் தி ஹீயோங் (நடுவில்) போலீசாரால் சூழப்பட்டு பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டார்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption கோலாலம்பூர் விமான நிலையத்தை சுற்றி வருகையில் டோன் தி ஹீயோங் (நடுவில்) போலீசாரால் பிடித்து கொண்டுவரப்பட்டார்.
படத்தின் காப்புரிமை EPA
Image caption ஒxரு சமயத்தில் சிட்டி அய்ஷ்யா (நடுவில்) அழ தொடங்கிவிட்டார் என்று அவ்விடத்தில் இருந்த பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

அவர்களுக்கு ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகளால் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

படத்தின் காப்புரிமை EPA
படத்தின் காப்புரிமை Reuters

விமான நிலையத்தை பாதி சுற்றிவந்த நிலையில், அய்ஷ்யா அழத் தொடங்கினார். ஹீயோங் என்பவரும் உடல் நலமின்றி இருப்பதாக தோன்றினார் என்று ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளிளிட்டிருந்தது.

இந்த பெண்களுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் அந்த பெண்களை சக்கர நாற்காலியில் தள்ளிச் சென்றனர்.

படத்தின் காப்புரிமை Reuters

இந்த விசாரணையில் அவர்களுக்காக வாதிடும் வழக்கறிஞர்களும், நீதிபதியும் அவர்களுடன் சென்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையோர் பற்றிய நல்லதொரு புரிதலை வழங்குவதற்காகவே விமான நிலையத்திற்கு அவர்கள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அப்போது, விமான நிலைய காப்பிக்கடை ஒன்றுக்கும் இந்த குழு சென்றது.

படத்தின் காப்புரிமை EPA

கிம் தாக்கப்பட்டதாக தோன்றுகின்ற சோதனை அறைக்கும், அவர் மருத்துவ உதவி கோரிய மருத்துவ மையத்திற்கும் இந்த பெண்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images

இந்த பெண்கள் இருவரின் குற்றச்சாட்டுக்களும் உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். மலேசியாவை விட்டு தப்பியோடிய வட கொரியர்கள் 4 பேர்தான் உண்மையான குற்றவாளிகள் என இந்த பெண்களின் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வருகின்றனர்.

ஏறக்குறைய 45 வயதான கிம், வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் ஒன்றுவிட்ட மூத்த சகோதரராவார்.

கொல்லப்பட்ட வேளையில், அவர் நாட்டைவிட்டு வெளியேறி மக்கௌவில் வாழ்ந்து வந்ததாகவும், சீனாவோடு தொடர்பில் இருந்ததாகவும் நம்பப்படுகிறது.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வடகொரிய முக்கியஸ்தர் மலேசியாவில் கொலை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :