சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கிறார் இன்னொரு செனட்டர்

  • 25 அக்டோபர் 2017
செனடர் ஃபில்கே படத்தின் காப்புரிமை Win McNamee/Getty Images

அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அரிசோனா மாகாண செனட்டரான ஜெஃப் ஃபிலேக், நாட்டின் தலைமையில், "பொறுப்பற்ற, மூர்க்கத்தனமான, கண்ணியமற்ற நடத்தை," என்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றார்.

இதற்கு முன்பு, அதிபர் டிரம்ப், ஃபிலேக்கை, "நச்சு" எனத் தெரிவித்திருந்தார்.

டிரம்ப் ஏற்கனவே இன்னொரு குடியரசு கட்சி செனட்டரான பாப் கார்க்கரோடு சர்ச்சையில் ஈடுபட்டுள்ளார்.

செனட்டில் தனது முடிவை அறிவிப்பதற்கு முன்பாக, அரிசோனா குடியரசு பத்திரிக்கையிடம் பேசிய அவர், "என்னைப் போன்ற குடியரசு கட்சியாளருக்கு, தற்போதுள்ள குடியரசு சூழலிலோ, கட்சியிலோ இடமிருக்காது," என்றார்.

தனது விலகல் குறித்து அறிவிக்கையில், தான் அதிபரை விமர்சிப்பதை மகிழ்ச்சியாகச் செய்யவில்லை என்று கூறிய அவர், "அது கடமை உணர்ச்சி மற்றும் மனசாட்சி," காரணமாகவே விமர்சிப்பதாக அவர் கூறினார்.

"எனக்கு இருக்கும் குழந்தைகளுக்கும், பேரக்குழந்தைகளுக்கு நான் பதில் கூறியாகவேண்டும். அதிபருக்கும் அதே நிலையே" என்றார் அவர்.

வெள்ளை மாளிகையில் ஊடக செயலாளரான சாரா சாண்டர்ஸ், ஃபிலேக் பதவி விலகியது, நல்ல ஒரு நகர்வு தான் என்றும், ஏனெனில், அவர் மறுதேர்தலில் வெற்றி பெறாமலும் போகலாம் என்றும் கூறியுள்ளார்.

நமது ஜனநாயக நெறிகளுக்கும், லட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதை இயல்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறிய அவர், டிரம்ப்பின் அணுகு முறை மீது கடும் அதிருப்தி உடையவர். அதிபர் தேர்தல் காலத்திலயே டிரம்பை எதிர்த்தவர். ஆனால் கட்சி முடிவை மதித்தே அவர் டிரம்பை ஆதரித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்