பிபிசி தமிழில். . . மதியம் 1 மணி வரை . . .

பிபிசி தமிழில் இன்று 1 மணி வரை வெளியான செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

"ஒர் ஆணை எது அழகாக்குகிறது?" என் பெண் தோழிகளுடன் ஒரு குளிர்கால மாலையில் தேனீர் அருந்த அமர்ந்தபோது எங்களுக்குள் விவாதமாக எழுந்த கேள்வி இது.

யார் அழகு? தமிழ் ஆண்களா, மலையாள ஆண்களா?

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய "2ஜி" எனப்படும் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு தேதி வரும் நவம்பர் 7-ம் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 7-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிக்கப்படும்: சிபிஐ நீதிமன்றம்

மியான்மரில் ரக்கைன் மாநிலத்தில் ரொஹிஞ்சா மக்கள் நடத்தப்படும் விதம் காரணமாக, மியான்மரில் உள்ள தனது ராணுவ உதவிக் குழுக்களை திரும்பப் பெறுகிறது அமெரிக்கா.

மியான்மருக்கான ராணுவ உதவியை விலக்கிக்கொள்கிறது அமெரிக்கா

படத்தின் காப்புரிமை WIN MCNAMEE/GETTY IMAGES

அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்புக்கு அவரது சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜெஃப் ஃப்ளேக் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதோடு, தாம் மீண்டும் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சொந்தக் கட்சியில் இருந்து டிரம்பை எதிர்க்கிறார் இன்னொரு செனட்டர்

படத்தின் காப்புரிமை AJAY

கழிவறை இல்லாமல் பெண்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தீர்ப்பதற்காக உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதியில் உள்ள பாஹ்பத்தின் பிஜ்வாடா கிராம பஞ்சாயத்து, முக்கியமான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. எந்த வீட்டில் கழிவறை இல்லையோ, அங்கு திருமணம் நடக்காது என்பதே அந்த தீர்மானம்.

கழிவறை இல்லாத வீட்டில் கெட்டிமேளம் கிடையாது

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நவீன தொழில்நுட்பங்களால் அசத்தும் சென்னை ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்