திவ்யாவின் வயது என்னவாக இருக்கும்? புதிர் - 23

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்!

வாழ்த்துகள்!

பட மூலாதாரம், Getty Images

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் 23-ஆம் பகுதி இது.

காணொளிக் குறிப்பு,

உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்

புதிர் -23

திவ்யாவின் வயதை ஆறால் வகுத்தால் மீதம் 3; ஏழால் வகுத்தால் மீதம் 4.

அவளது வயதை ஏழால் வகுத்தால் மீதமாக கிடைப்பது நான்கு.

எனவே திவ்யாவின் வயது குறைந்தபட்சமாக என்ன என்பதை கண்டுபிடியுங்கள்!

விடை: 39

முதல் தகவலின்படி திவ்யாவின் வயதை வகுத்தால் மீதம் 3 என வருவதால், 9; 15; 21; 27; 33; 39 எனும் தொடர் எண்களில் ஒன்றாக இருக்கலாம்.

இரண்டாம் தகவலின்படி திவ்யாவின் வயதை ஏழால் வகுத்தால் மீதம் 4 என வருவதால், 11; 18; 25; 32; 39 ஆகிய தொடர் எண்களில் ஒன்றாக இருக்கலாம்.

இந்த இரண்டு எண் வரிசைகளிலும் வரும் முதல் சிறிய எண் 39. எனவே திவ்யாவின் வயது 39.

இந்த புதிர், எக்ஸீட்டர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கிஹான் மரசிங்ஹாவால் உருவாக்கப்பட்டது.

முந்தைய புதிர்கள்:

பிற செய்திகள்

காணொளிக் குறிப்பு,

93 வயதில் நீச்சலில் உலக சாதனை படைக்கும் பெண்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :