மக்களை ஒன்று திரட்டிய ரஷ்யப் புரட்சியின் அரசியல் சுவரொட்டிகள்

1917 ஆம் ஆண்டு ஏற்பட்ட ரஷ்யப் புரட்சி, மக்கள் பெரும் எழுச்சிக்கண்ட காலமாக இருந்ததோடு, படைப்பாற்றல் மிகுந்த நேரமாகவும் இருந்தது.

போராடுவதற்கு மக்களை அணிதிரட்டுவதற்கு அந்த ஆண்டு முழுவதும் உருவாக்கப்பட்ட அரசியல் சுவரொட்டிகளின் பரிணாமத்தில் இருந்து நாம் இதை காண முடியும்.

அவ்வாறன பழமையான 10 அரசியல் சுவரொட்டிகளை தேர்ந்தெடுக்க ரஷ்யாவின் தற்கால வரலாற்றின் தேசிய மத்திய அருங்காட்சியகத்தின் நிகழ் கலையின் இயக்குநராக இருக்கும் விரா பான்ஃபிலோவாவிடம் பிபிசி கேட்டுக்கொண்டது.

"சுதந்திரத்திற்கு நிதி ஆதரவு"

சிப்பாய் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதை வரைந்த போரிஸ் குஸ்டோதீஃப்யின் பிரபல ஓவியம் முதல் உலக போருக்காக பணம் வழங்க ரஷ்யர்களை வலியுறுத்தியது.

மக்கள் நிதி ஆதரவு வழங்குவதற்கு விளம்பரம் செய்ய 1917 ஆம் ஆண்டு இந்த சுவரொட்டி தயாரிக்கப்பட்டது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை ஒவ்வொரு சுவரொட்டிக்கு முன்னரும் தோன்றுவதற்கு அந்த சிப்பாய் சென்றது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

புரட்சிகர நாட்கள்

மார்ச் 1917 ஆம் ஆண்டு, மாஸ்கோவின் வோஸ்க்கெர்ஸ்சென்ஸ்காயா சதுக்கமும், நகரின் நாடாளுமன்ற கட்டிடமும் புரட்சிகர பேரணிகளுக்கான மைய இடங்களாக மாறின.

ரஷ்யப் புரட்சியை பற்றி மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும், இந்த "நிகழ்வு சுவரொட்டி" சித்தரிக்கிறது.

இந்தப் புரட்சியை புதிய யுகத்தின் தொடக்கமாக மக்கள் பார்த்தனர்.

இவை அனைத்தும் போர் நடந்து கொண்டிருந்த பிண்ணியில் நிகழ்ந்து கொண்டிருந்தன.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

வழிநடத்தும் மனிதர்கள்

இது உண்மையிலே சுவரொட்டி அல்ல. ரஷ்யாவில் அதிகாரத்தை மனிதராக காட்டி விளக்கும் துண்டுபிரசுரம்.

இந்த மனிதர்கள் அப்போது வழிநடத்திய ஆளுமைகள், தற்காலிக அரசின் உறுப்பினர்கள்.

டுமாவின் தலைவரான மிகையில் ரொட்ஸியான்கோ மைய இடத்திலுள்ளார். அரசாங்கத்தின் முதல் சோசலிஸ்ட்டும், எதிர்கால தலைவருமான அலெக்ஸாண்டர் கெரென்ஸ்கி, கீழே இடது மூலையில் அமர்ந்துள்ளார்.

மேற்புறத்தில் ஆயுதமேந்திய மனிதர்கள், "நிலமும், சுதந்திரமும்", "போர் மட்டுமே உங்களுடைய உரிமைகளை நிலைநாட்டும்!" என்ற பதாகைகளை வைத்துள்ளனர். அந்நேரத்தில் போல்ஷிவிக்ஸ் இல்லை.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

திசைமாறும் காற்று

எழுத்தாளர் மாக்சிம் கார்கியால் புரட்சிக்கு முன்னர் நிறுவப்பட்ட பாருஸ் இடதுசாரி வெளியீட்டு நிறுவனத்தில் இருந்து இது வருகிறது. விளாடிமிர் மயாகோஃப்ஸ்கி மற்றம் அலெக்ஸி ரடாகோஃப் போன்ற பிரபல கவிஞர்களாலும், ஓவிய கலைஞர்களாலும் இந்த வெளியீட்டின் சுவரொட்டிகள் உருவாக்கப்பட்டன.

"இதைத்தான் இந்த சிப்பாய் தற்காத்துக்கொள்ள பயன்படுத்துகிறார்" என்ற வாசகத்துடன் மேலுள்ள படம் முதலாளித்துவத்தை பாதுகாப்பதை காட்டுகிறது.

இரண்டாவது, முழக்கங்களை கொண்ட பதாகைகளை தாங்கியுள்ள புரட்சிக்கு முந்தைய படங்கள், "நிலமும், சுதந்திரமும்!", "ஜனநாயகம், குடியரசு மற்றும் விபர்டி" என்று காட்டுகிறது. வசனம் இவ்வாறு செல்கிறது: "இவற்றை இவர் இன்று பாதுகாக்கிறார்".

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

உதய சூரியன்

1917 ஆம் ஆண்டு, இரண்டாம் சார் நிக்கோலாஸ் முடிதுறந்து, தற்காலிக அரசை உருவாக்கினார்.

"மக்களின் வெற்றியின் நினைவு" என்று அந்த சுவரொட்டிக்கு பெயரிடப்பட்ட்டுள்ளது. பணிவான சார் மன்னர், ஆயுதமேந்திய ஒரு சிப்பாயும், தொழிலாளரும் அடையாளப்படுத்தும் புரட்சிகர படைப்பிரிவுகளிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை காட்டுகிறது.

பின்னணியில், நாட்டின் டுமாவில் சந்திக்கின்ற பிரதிநிதிகள் இருக்கின்ற அவுரைட் அரண்மனையை நீங்கள் பார்க்கலாம். அதற்கு மேலுள்ள உதய சூரியன்: சுதந்திரத்தின் அடையாளம்.

இந்த காலத்தில் உருவான சுவரொட்டிகளில் மீண்டும் மீண்டும் இந்த அடையாளம் தோன்றும்.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

சமூகப் பிரமிடு

மயாகோஃப்ஸ்கி மற்றம் ரடாகோஃப் கைவண்ணத்தில் பாருஸ் வெளியீட்டு நிறுவனத்திற்கு உருவான இன்னொரு சுவரொட்டி. இது தெளிவானதொரு கேலிச்சித்திரம்.

தன்னுடைய அங்கி கீழ் தொங்க மாட்சிமையுடன் வீற்றிருக்கும் சார் மன்னர், இரு பக்கத்திலும் இருக்கும் மக்களை உற்று நோக்குகிறார்.

மேலிருந்து கீழ்: "நாம் ஆட்சி செய்கிறோம். நாம் உங்களுக்காக செபிக்கிறோம். நாம் தீர்ப்பிடுகிறோம். நாம் உங்களை பாதுகாக்கிறோம். நாம் உணவளிக்கிறோம். நீங்கள் வேலை செய்யுங்கள்".

1917 ஆம் ஆண்டு கோடைக்காலம் வரை வெளிவந்த மிகவும் பிரபலமான நையாண்டி கதைகள் அலுவலக வேலைகளுக்கு, மன்னராட்சிக்கு எதிரானவைகளாக அமைந்திருந்தன. அதலும் குறிப்பாக இரண்டாம் சார் நிக்கோலாஸ் மற்றும் அவரது மனைவிக்கு எதிரானதாக அமைந்திருந்தன.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

முதல் பரப்புரையில்

1917 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில், ரஷ்யாவில் முதலாவது பொது தேர்தல் பரப்புரை தொடங்கியது.

இந்தப் பரப்புரை தீவிரமானதாகவும், சமரசமற்றதாகவும் இருந்தது.

டஜன்கணக்கான நிறுவனங்கள் இதில் பங்கெடுத்தன. ஆனால், சோசலிச புரட்சிகர கட்சி மிகவும் பெரிதான ஒன்றாக இருந்தது.

இந்த சுவரொட்டியிலுள்ள வாசகம் இவ்வாறு உள்ளது: "குடிமக்கள் தோழர்களே! அரசியல் சட்டப்பேரவை தொடங்குகின்ற நாளில் ஆர்ப்பாட்டங்களுக்கு தயாராகுங்கள்"

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

"அராஜகம் ஜனநாயகத்தால் தோற்கடிக்கப்படும்!"

இது விலங்கு மற்றும் புராண சித்திரங்களின் கலவையைப் பயன்படுத்துகிற கடெட் கட்சியில் இருந்து வருகின்ற சுவரொட்டியாகும்.

ராட்சத உடும்பு அராஜகத்தையும், வெள்ளை குதிரையில் இருக்கும் பாதுகாவலர் ஜனநாயகத்தையும் பிரதிபலிக்கின்றன..

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

சங்கிலிகளை தகர்த்தல்

சோசலிச புரட்சிக்கர கட்சியின் தேர்தல் சுவரொட்டி எளிமையானது, தொழிலாளர்களையும், விவசாயிகளையும் இலக்கு வைத்து இது உருவாக்கப்பட்டது.

சோசலிச புரட்சிக்கர கட்சிதான் உங்களுடைய உரிமைகளை பெற்றுதரும் போரில் உள்ளது!.

அவர்கள் மிகவும் போட்டி மிகுந்த பரப்புரையை மேற்கொண்டனர். "

நிலமும். சுதந்திரமும்!" மற்றும் "சங்கிலிகளை தகர்த்தெறியுங்கள், முழு உலகமும் சுதந்திரமாக இருக்கும்" என்ற முழக்கங்களால் அவர்களுடைய வெற்றியை சாதிக்க முடிந்தது.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

கட்சிக்கு தாமதம்

இந்த சுவரொட்டி பரப்புரைக்கு போல்ஷிவிக் கட்சி மிகவும் தாமதமாக வந்தது.

1917 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரை சுவரொட்டி இவ்வாறு செல்கிறது: "போல்ஷிவிக் கட்சியினருக்கு வாக்களியுங்கள்".

1917 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போர் வெடித்தபோது, இந்த கட்சி சுவரொட்டியை மிகவும் அதிகமாக பயன்படுத்த தொடங்கியது.

மயாகோஃப்ஸ்கி மற்றும் அலெக்லி ரடாகோஃப் உள்பட சோசலிச ஒவியக் கலைஞர்கள் குழு பிரபலமான ஒக்னா ரோஸ்டா (ரோஸ்டா வின்டோஸ்) பிராண்டை உருவாக்கினர்கள்.

இந்த சுவரொட்டிகள் எளிமையானவையாக இருந்தன. செய்திகள் குறுகியதாகவும், நேர்த்தியானவையாகவும், தெளிவானதாகவும் இருந்தன.

இந்தப் பிராண்ட் சோவியத் பரப்புரையின் முத்திரையாக உருவாகி, படிப்படியாக உலக அளவில் பழம்பெரும் வடிவமைப்பாக உருவானது.

பட மூலாதாரம், SOVRHISTORY.RU

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :