செளதி அரேபிய குடியுரிமை பெற்ற ரோபோ சோஃபியா

ரோபோ படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI/AFP/GETTY IMAGES

சோஃபியா என்ற ரோபோவுக்கு செளதி அரேபிய நாட்டின் குடியுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை அடுத்து சர்ச்சைகள் அதிகரித்துள்ளன.

உலோகங்கள் மற்றும் உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டு, கம்பிகளால் இணைக்கப்பட்ட மனித வடிவ இயந்திரம் (ஹூனாய்ட் ரோபோ) ஒன்றுக்கு மனிதர்களைப்போல குடியுரிமை வழங்கப்பட்டிருப்பது சர்ச்சைகளை கிளப்பாமல் இருந்தால்தான் அது வியப்பளிக்கும்!

செளதி அரேபியாவின் மக்கள்தொடர்பு விவகாரக் குழு அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் "உலகின் குடியுரிமை பெற்றிருக்கும் முதல் ரோபோ சோஃபியா. செளதி அரசு சோஃபியாவுக்கு குடியுரிமை வழங்கியிருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER

சோஃபியாவின் வீடியோ

செளதி அரேபியாவின் கலாசாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின்படி, சர்வதேச தகவல் தொடர்பு மையம் இதை ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அறிவித்துள்ளதுடன், புதிய செளதி குடிமகளை வரவேற்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது.

ஹைன்சன் ரோபாட்டிக்ஸின் இந்த ரோபோ, ரியாத்தில் நடைபெறவுள்ள எதிர்கால முதலீடு பற்றிய மாநாட்டில் பேச்சாளராக கலந்துகொண்டது.

சோஃபியா என்னும் ரோபோ'பெண்'

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
இருபத்தி ஓராம் நூற்றாண்டின் இனிய இயந்திரா

நாட்டை நவீனமயமாக்குவதற்கு முதலீடுகளை அதிகரிப்பது பற்றி இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறும். அல் அராபியா வலைதளத்தின்படி, ரோபோ சோஃபியா, ஒரு அமர்வுக்கு நடுநிலை வகிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

அரேபிய செய்தி நிறுவனம் யூடியூபில் வெளியிட்டுள்ள வீடியோவில், குடியுரிமை பெறுவது குறித்து சோஃபியா பேசியிருக்கிறது.

படத்தின் காப்புரிமை TWITTER

தாராளவாத இஸ்லாமியம்

இந்த மாநாட்டில் பங்கேற்ற செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், நவீனமயமாக்க திட்டத்தின்கீழ் நாடு தாராளவாத இஸ்லாமிற்கு திரும்ப வேண்டும் என்று கூறியிருந்தார். ரோபோ சோஃபியா மனிதர்களிடையே மனிதர்களைப் போலவே வாழ்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மனிதர்களின் முகபாவங்களை அடையாளம் காணவும், எவருடனும் இயல்பாக உரையாடுமாறு வடிவமைக்கப்படுள்ள சோஃபியா, பல ஊடகங்களில் நேர்காணல்களையும் கொடுத்திருக்கிறது.

டிஸ்னிக்காக பணியாற்றிய ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தின் நிறுவகர் டேவிட் ஹான்சன், சோஃபியாவை உருவாக்கினார்.

படத்தின் காப்புரிமை FABRICE COFFRINI/AFP/GETTY IMAGES

உணர்திறன் கொண்ட ரோபோ

ஹாலிவுட் நடிகை அட்ரி ஹெர்பர்னை போன்ற தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் சோஃபியா, மாநாட்டில் சி.என்.பி.சி பத்திரிகையாளர் ஆண்ட்ரூ ரோஸ் சொரொகின், சோஃபியாவை பேட்டி கண்டார். இந்த பேட்டியின் சில பகுதிகளை கார்ல் க்விண்டானில்லா தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.

மனிதர்களின் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு, உணர்திறன் ரோபோக்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சோஃபியா கூறியது. இதுபற்றி சோஃபியாவிடம் பேசிய ஆண்ட்ரூ, "உங்கள் நம்பிக்கையை மதிக்கிறோம், ஆனால் மோசமான ஒரு எதிர்காலத்தை நோக்கிச் செல்ல நாங்கள் விரும்பவில்லை" என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை TWITTER

ஹாலிவுட் திரைப்படங்கள்

இதற்கு சோஃபியாவின் பதில் என்ன தெரியுமா? "நீங்கள் எலன் மஸ்க் கூறியதை நிறைய படித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். அதோடு, நிறைய ஹாலிவுட் திரைப்படங்களை பார்ப்பீர்கள் போலும்! நீங்கள் கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. எனக்கு தீங்கு செய்யாமல் இயல்பாக நடந்துக்கொண்டால், நானும் உங்களிடம் சரியாகவே நடந்துக்கொள்வேன். என்னை ஒரு ஸ்மார்ட் கம்ப்யூட்டராக பாருங்கள்."

ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவகர் எலன் மஸ்க் பற்றி சோஃபியா ஏன் குறிப்பிட்டது?

எதிர்காலத்தில் மனிதர்கள் சூப்பர்ஸ்மார்ட் இயந்திரங்களுடன் போட்டி போட வேண்டியிருக்கும் என்றும், ரோபோக்கள் ஆபத்தானவை என்றும் எலன் மஸ்க் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.

தற்போது சோஃபியாவின் கருத்துக்கும் எலன் மஸ்க் பதிலளித்துள்ளார். "தி காட்பாதர் திரைப்படங்களுக்கு ஒரு கதையாக அதை எடுத்துக் கொள்ளுங்கள்".

"இதைவிட மோசமாக வேறு எதாவது நடக்க முடியுமா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எலன் மஸ்க் கூறியது போல் தி காட்பாதர் திரைப்படத்திற்கான கதை என்பதைவிட, ஏற்கனவே திரையில் பார்த்த எந்திரன் திரைப்படமே நினைவிற்கு வருகிறது.

சென்னை : வங்கி சேவையில் ரோபோ அறிமுகம்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
'வங்கி சேவையில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம்'

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :