பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகள்

பிபிசி தமிழில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை AIIMS

ஒடிஷாவைச் சேர்ந்த தலை ஓட்டிப் பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளை டெல்லியில் உள்ள மருத்துவர்கள், வியாழன்று, அறுவை சிகிச்சை மூலம் பிரித்துள்ளனர்.

செய்தியை படிக்க:தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள்: பிரித்த அரசு மருத்துவர்கள்

வங்கதேசத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சிறுபான்மை இந்து குடும்பங்கள், அந்த நாட்டின் பழைய சட்டத்தின் காரணமாக பல ஆண்டுகளுக்கு முன்னதாக தங்கள் சொத்துக்களை இழந்துவிட்டார்கள்.

செய்தியை படிக்க:சொந்த இடங்களிலிருந்து 'வெளியேற்றப்பட்ட' வங்கதேச இந்துக்கள்

மகாராஷ்டிராவின் பின்தங்கிய பகுதியொன்றை சேர்ந்த ரத்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கு திருமணம் நடைபெற்றவுடன் பேரின்ப காலத்தை எதிர்நோக்கி புதியதொரு வாழ்க்கையை தொடங்கினார்.

செய்தியை படிக்க: இந்தியாவின் திருமணங்களில் ஆபாசப் படங்களின் தாக்கம் என்ன?

படத்தின் காப்புரிமை EPA

அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்.

செய்தியை படிக்க: கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
சென்னை அருகே ஒரு 'ஸ்மார்ட்' கிராமம்

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை கிராம மக்களை கொண்டே முழுமையாக மீட்டெடுத்துள்ளார் அம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சுமதி.

படத்தின் காப்புரிமை G VENKET RAM

மெர்சல் படத்தில் இந்தியாவின் வரி விதிப்பு முறை குறித்து பல தவறான தகவல்கள் இருப்பதால் அந்தப் படத்திற்கு அளிக்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை தள்ளுபடி செய்ய வேண்டுமெனக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

செய்தியை படிக்க: இதற்கெல்லாம் எதற்கு தடை: 'மெர்சல்' மனுதாரரை கண்டித்த நீதிபதிகள்

படத்தின் காப்புரிமை EPA

இரட்டை குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்பட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

செய்தியை படிக்க: இரட்டை குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகுதி நீக்கம்

படத்தின் காப்புரிமை KEYSTONE-FRANCE
Image caption டோக்ரா குடும்பம் ஜம்மு காஷ்மீரை ஒரு நூற்றாண்டாக ஆண்டது

தனது சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ளலாம் என ஜம்மு காஷ்மீர் நம்பியது. ஆனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளால் அது ஒரு பக்கமாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

செய்தியை படிக்க:இந்தியாவுக்கு ஆதரவாக போராடிய காஷ்மீரிகள் எதிரிகளாக மாறியது எப்படி?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
நூறு பலூன்களுடன் வானில் பறந்த சாகச வீரர்

ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட 100 பலூன்களில் தொங்கியபடி பிரிஸ்டலிலிருந்து சுமார் 25 கி.மீட்டர் தூரத்திற்கு தென் ஆஃப்ரிக்கா முழுவதும் பறந்துள்ளார் சாகச வீரர் ஒருவர்.

காணொளியை பார்க்க: நூறு பலூன்களுடன் வானில் பறந்த சாகச வீரர்

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தசைநார் தேய்வால் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே பாராகிளைடிங் செய்யும் பெண்

தனக்கு இருக்கும் தசைநார் தேய்வு நோயை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சக்கர நாற்காலியில் இருந்துகொண்டே பாராகிளைடிங் மற்றும் நகைச்சுவையாளராக வலம்வரும் பாகிஸ்தானை சேர்ந்த கத்தார் வாழ் பெண் பற்றிய காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்