வடகிழக்கு பருவ மழை தயார்: தமிழக அரசு தயாரா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் பாதிப்புகளும், மரணங்களும் தமிழகத்தில் அதிகளவில் உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption (கோப்புப் படம்)

இதுகுறித்து அரசியல் கட்சிகள், பிற அமைப்பினர் ஆகியோர் தங்களது கருத்துகளையும் கண்டனங்களையும் தொடர்ந்து வருகின்றனர். அரசும் அதிகாரிகளும் நோய் பரவழைத்த தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அரசு செயல்படவில்லை என்று சிலர் விமர்சித்தாலும், நிலவேம்புக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் அறிவியல்பூர்வமானவை அல்ல என்றும் இன்னொரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர்.

"வட கிழக்கு பருவ மழை தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளதா?" என்று கேள்விக்கு பிபிசி தமிழின் ஃபேஸ்புக் நேயர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர்கள் பதிவிட்ட கருத்துகளை தொகுத்து வழங்குகிறோம்.

"இங்கு அரசு என்று ஏதுமில்லை"

"டெங்குவால் அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக "கொள்ளை நோய்"க்கு பலியாகிறார்கள். ஆனால் அரசோ, அதனை திசைதிருப்பும் விதமாக சோதனை என்ற பெயரில் அரசு தனது இயலாமையை அப்பட்டமாக காட்டுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மக்களே தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். இங்கு அரசு என்று ஏதுமில்லை," என்று கூறியுள்ளார் புண்ணியகோடி சேது எனும் நேயர்.

"முக்கியமாக டெங்குவை தடுக்க வேண்டும். இந்த ஆண்டு அரசின் செயல்பாடு சிறிது நம்பிக்கை அளிக்கிறது," என்பது செந்தில் குமாரின் கருத்து.

"மக்கள் மொட்டைகளாக இருக்கும் வரை தமிழக மக்களின் அவள தலையெழுத்தை மாற்ற முடியாது......இலங்கையில் ஒரு அரசாங்கம் ஒருமுறைதான்....சினிமாவுக்கு மதிப்பும் இல்லை மரியாதையும் இல்லை," தமிழக அரசியல் நிலவரத்தை விமர்சித்து பதிவிட்டுளார் முனவர் ஸ்ரீலங்கா எனும் பெயரில் பதிவிடும் பிபிசி நேயர்.

நீர் மேலாண்மை

"புதிய திட்டங்கள் தேவை இல்லை, ஏற்கனவே உள்ள நீர் நிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்து, சீர் படுத்தினாலே போதுமானது...," என்று நீர் மேலாண்மைக்கான வாய்ப்பாக இந்த பருவ மழையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வினோ விவின் எனும் பதிவாளர்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வெள்ளத்தின் நடுவே பியானோ இசை

"மழை நீர் வடிகால் என்று ஒன்று அமல்படுத்துகிறார்கள். ஒரு ஒரு பகுதியாக சென்று பார்க்கச்சொல்லுங்கள் அவர்களை," என்று அதே போன்றதொரு கருத்தை கூறியுள்ளார் ஜேசு குமார்.

"உலக அறிவாளி செல்லூர் ராஜு கிட்ட ஐடியா கேலுங்கப்பா... நெறைய வச்சிருக்காரு," என்று எள்ளலாக பதிவிட்டுள்ளார் சுல்தான் அலாவுதீன் எனும் நேயர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்