பிரிட்டன் அணு ஆயுதக் கப்பலில் போதை மருந்து உட்கொண்ட 9 மாலுமிகள் பணிநீக்கம்

பிரிட்டன் கடற்படைக்குச் சொந்தமான ஒரு அணுசக்தி ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலில் பணிபுரியும் ஒன்பது மாலுமிகள் போதை மருந்து உட்கொண்டது உறுதியானதால் பணிநீக்கம் செய்யப்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை PA
Image caption பிரிட்டனின் நான்கு வான்கார்ட்-கிளார்க் வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் எச்.எம்.எஸ் விஜிலண்ட்டும் ஒன்றாகும்.

அவர்கள் ட்ரையண்ட் அணுசக்தித் தடுப்புக்களை கொண்டு செல்லும் எச்.எம்.எஸ் விஜிலென்ட் கப்பலில் பணிபுரிந்தவர்கள்.

அவர்கள் கொகைன் என்ற போதை மருந்தை பயன்படுத்தினர் என்று டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

போதை மருந்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று பிரிட்டன் கடற்படை கூறியுள்ளது. "எங்களின் உயர்ந்த மதிப்பீடுகளைக் குறைத்ததாக கண்டறியப்பட்டவர்கள் பணியில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள்" என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில், இந்நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டன் அவரது குழு உறுப்பினருடன் "முறையற்ற உறவு" கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தவுடன், பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
பால்

இது பற்றிய விசாரணையால், நீர்முழ்கிக் கப்பலின் செயல்பாடுகள் பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் நான்கு வான்கார்ட்-கிளார்க் வகை நீர்மூழ்கிக் கப்பல்களில் எச்.எம்.எஸ் விஜிலண்ட்டும் ஒன்றாகும். இது எட்டு ட்ரையண்ட்ஸ் ஏவுகணைகளுடன், அணு ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறன் படைத்தது.

இந்த நீர் மூழ்கிக் கப்பல் ஸ்காட்லாந்தில் உள்ள ஃபேஸ்லேன் கடற்படை தளத்தைச் சேர்ந்தது.

பிரிட்டனின் கடற்படை கப்பல்கள் அனைத்திலும், பணியில் இருக்கும்போது நெருக்கமான உறவுகளைத் தடுக்கும் பொருட்டு பணியாளர்கள் ஒருவரை ஒருவர் தொடுவதற்கு தடை உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :