பெண்களுக்கான விளையாட்டு ஆடைகள் காலத்திற்கேட்ப மாறியது எப்படி?

கடத்த 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்களுக்கான விளையாட்டு ஆடைகள் அவர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் எனும் நோக்கில் வடிவமைக்கப்படவில்லை. மாறாக, அவை அவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகவும், விளையாட்டு அசைவுகளுக்கு அசௌகரியமானவையாகவும் இருந்தன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption முதல் ஒலிம்பிக் சாம்பியன் பிரிட்டன் வீராங்கனை சார்லெட் கூப்பர்.

பெண் தன்மையை வெளிப்படுத்தும் தோற்றத்திற்காக நீண்ட உடைகளை அணிவது அவர்களுக்கு வசதி குறைவாக மட்டும் இருக்கவில்லை. அவை பெண்கள் சிறப்பாக விளையாட தடையாகவும் இருந்தன.

காலங்கள் மாற மாற பெண்கள் விளையாட்டுகளில் அதிகமாகப் பங்கேற்கத் தொடங்கினார்கள். சில விதிவிலக்குகள் உள்ள போதிலும், அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு உடைகளும் வடிவமைக்கப்பட்டன.

பிபிசியின் 100 பெண்கள் தொடரின் ஒரு அங்கமாக பெண்களுக்கான விளையாட்டு ஆடைகள் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று காண்போம்.

டென்னிஸ்

ஒலிம்பிக் டென்னிஸ் போட்டிகளில் 1900-இல் முதல் முறையாக பெண்கள் விளையாட அனுமதிக்கப்பட்டனர். அந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர்களில் பெண்கள் வெறும் 2% மட்டுமே. டென்னிஸ் உள்பட ஐந்து விளையாட்டுகளில் அவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் கணுக்கால் மற்றும் மணிக்கட்டு வரை மூடும் நீளமான கால் மற்றும் கை சட்டைகளை அவர்கள் அணிய வேண்டியிருந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1926-இல் முழங்கால் வரையிலான ஆடையால் சுசான் லாங்லென் தனித்து தெரிந்தார்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டீனிஸ் வீராங்கனை சுசான் லாங்லென் அதில் ஒரு புரட்சி செய்தார். அவரது காலகட்டத்தில் முன்னி வீராங்கனையாக இருந்த அவர் பெண்கள் ஆடை அணியும் முறையே மாற்றினார். பெரிய, நீளமான உடையில் இருந்து குறுகிய உடைகளை அணிந்தார். அது அவரது அடையாளம் ஆகிப்போனது.

"எல்லா விளையாட்டு வீராங்கனைகளுக்கு சுசானுக்கு மண்டியிட்டு தங்களது நன்றியைத் தெரிவிக்க வேண்டும்," என்று அவரது சம கால் அமெரிக்க வீராங்கனை எலிசபெத் ரயான் கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2010 பிரெஞ்சு ஓப்பனில் வீனஸ் வில்லியம்ஸ் அணிந்த ஆடைகள் செய்திகளாகின

தற்போது விளையாட்டு விறுவிறுப்பாகி வருவதற்கேற்ப ஆடைகளும் மாறி வருகின்றன. வீனஸ் வில்லியம்ஸ் 2007-இல் தனது சொந்த ஃபேஷன் அடையாளங்களை அறிமுகம் செய்தார்.

ஒத்திசைவு நீச்சல்

தற்போது இவ்விளையாட்டானது கவர்ச்சியான, வண்ணமயமான ஆடைகள் மற்றும் நீர்ப்புகா அலங்காரம் வரை ஒத்திருக்கிறது.

ஆனால், இது எப்போதும் அப்படி கிடையாது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 'மெர்மைட்' என்று தங்களை அழைத்துக்கொண்ட பெண்கள் குழு 1937-இல் லண்டனில் வெம்ப்லீ நீச்சல் குளத்தில்.

இவ்விளையாட்டானது 1984 ஒலிம்பிக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதிகளவிலான சிந்தனை மற்றும் நேரம் அழகியலை நோக்கியே செல்கிறது.

"இது மிகவும் கலைத்துவம் மிக்க விளையாட்டு. எனவே, நிறைவான முடி, சரியான ஆடைகள் மற்றும் கச்சிதமான உடலமைப்பு என ஒட்டுமொத்த அழகும் அவசியமானது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2010 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பிரேசில் குழுவினர்

கைப்பந்து

பிரேசிலின் கைப்பந்து வீராங்கனையும், இந்த வருடத்துக்கான பிபிசியின் 100 பெண்கள் பட்டியலில் இடம் பெற்றவருமான இசபெல்லா பிளேயரி, ரியோ டி ஜெனிரோ அணியில் இருந்தபோது கைப்பந்து விளையாட்டிற்கு கடற்கரை கைப்பந்து விளையாட்டு போட்டிகளை போன்று பிகினி உடைகள் பெண்களுக்கு வழங்கப்படுவதை எதிர்த்தது, ஊடகங்களில் பரபரப்பானது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1935-இல் பெர்லினில் நடைபெற்ற ஒரு பெண்கள் கைப்பந்து போட்டி.

"கடைசியாக நாங்கள் விளையாட முயற்சித்த போது ஷார்ட்ஸை அணிந்திருந்தோம். ஆனால் அவர்கள் ஷார்ட்ஸை கழற்றிவிட்டு, ஸ்பீடோஸை அணிய வேண்டும் என்று விரும்பினார்கள்," என்று அவர் கூறினார். "நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், அவர்கள் எங்களை அச்சுறுத்தினர், நாங்கள் ஷார்ட்ஸை கழற்றிவிட்டு பிகினியை அணிந்துக் கொண்டு விளையாட வேண்டியதாயிற்று. அவை தற்போது விதிகளை மாற்றி வருவதற்கான காரணமாகின்றன."

படத்தின் காப்புரிமை Getty Images

2014 ஆம் ஆண்டில், ஸ்பெயினின் பாஸ்க் பிராந்தியத்தில் கடற்கரை கைப்பந்து வீராங்கனைகள், ஆண்கள் தளர்வான உடைகளை அணிய அனுமதிக்கப்படும் நிலையில், தங்களின் ஆடை கட்டுப்பட்டு விதிகள் ஆபாசமாக இருப்பதாக புகார் தெரிவித்ததால் பிரச்சனை வெடித்தது.

கால் பந்து

பெண்கள் கால் பந்து பிரிட்டனின் 'சஃப்ரகெட்' இயக்கத்துடன் தொடர்புடையது. இது பெண்களின் வாக்குரிமைக்காக போராடிய அமைப்பு. அதன் முக்கிய தலைவர் லேடி ஃபிளாரன்ஸ் டிக்சி பிரிட்டிஷ் பெண்கள் கால் பந்து மன்றத்தின் தலைவராக இருந்தார். விக்டோரியா கால உடைகளில் இருந்து விளையாட்டு வீராங்கனைகள் வெளிவர கால் பந்து விளையாட்டு ஒரு ஆயுதம் என்று அவர் எண்ணினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 1939-இல் பிரஸ்டன் கால் பந்து அணியினர்

"நியாயமான முறையில் உடையணிந்து, காலத்திற்கேற்ற வகையில் அவர்கள் மகிழும் வகையிலான உடையில் பெண்கள் ஏன் காலம்பந்து விளையாட கூடாது, ஏன் அதில் அவர்கள் வெல்லக் கூடாது என்பதற்கு இந்தக் காரணமும் இல்லை, " என்று 1895-இல் அவர் எழுதினார்.

1921-இல் பிரிட்டன் கால் பந்து அமைப்பு தனது மைதானங்களில் பெண்கள் விளையாட தடை விதித்தது. "பெண்களுக்கு இது பொருத்தம் இல்லாத விளையாட்டு என்றும். பெண்கள் விளையாடுவதை ஊக்குவிக்க கூடாது," என்றும் அந்த அமைப்பு கூறியது. 1971-இல்தான் இத்தடை நீக்கப்பட்டது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption காபுலில் நடைபெற்ற ஒரு போட்டியில் ஆஃப்கன் மகளிர் கால் பந்து அணி

2014-இல் ஹிஜாப் உள்ளிட்ட தலையை மறைக்கும் ஆடைகளுடன் பெண்கள் விளையாட சர்வதேச கால் பந்து சம்மேளனம் அனுமதித்தது. கழுத்தில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு உள்ளிட்ட காரணங்களால் அவற்றுக்கு முன்னதாக தடை இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :